பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

புகழேந்தி நளன் கதை




மறைமுதல்வழியிங்கே வந்தருளப் பெற்றேல்
பிறவிப் பெருந்துயரம் எல்லாம்-அறவே
பிழைத்தேன்யான் என்றானப் பேராழி யானை
அழைத்தேவல் கொண்ட அரசு 11


மெய்த்திருவந் துற்றாலும் வெந்துயர்வந் துற்றாலும்
ஒத்திருக்கும் உள்ளத் துரவோனே-சித்தம்
வருந்தியவா என்னென்றான் மாமறையால் உள்ளம்
திருந்தியவா மெய்த்தவத்தோன் தேர்ந்து 12


அம்பொற் கயிலைக்கே ஆகத் தரவணிவார்
தம்பொற் படைக்குத் தமியனா-எம்பியைமுன்
போக்கினேன் என்றுரைத்தான் பூதலத்தும் மீதலத்தும்
வாக்கினேர் இல்லாத மன் 13


காண்டா வனந்தீக் கடவுளுணக் கைக்கணையால்
நீண்ட முகில்தடுத்து நின்றாற்கு-மீண்டமரர்
தாளிரண்டும் நோவத் தனித்தனியே ஓடியநாள்
தோளிரண்டும் அன்றோ துணை 14


பேரரசும் எங்கள் பெருந்திருவும் கைவிட்டுச்
சேர்வரிய வெங்கானம் சேர்தற்குக்-காரணம்தான்
யாதோவப் பாவென்றான் என்றுந்தன் வெண்குடைக்கீழ்த்
தீதோவப் பார்காத்த சேய். 15


கேடில் விழுச்செல்வம் கேடெய்து சூதாடல்
ஏடவிழ்தார் மன்னர்க்கு இயல்பேகாண்-வாடிக்
கலங்கலைநீ என்றுரைத்தான் காமருவு நாடற்கு
இலங்கலைநூல் மார்பன் எடுத்து 16


கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தாம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி-விண்ணிழந்த
மின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்? 17