பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

புகழேந்தி நளன் கதை




மாமனுநூல் வாழ வருசந்திரன்சுவர்க்கி
தாமரையாள் வைகும் தடந்தோளான்-காமருபூந்
தாரான் முரணைநகர் தானென்று சாற்றலாம்
பாராளும் வேந்தன் பதி 24


ஓடாத தானை நளனென்றுளன்ஒருவன்
பீடாரும் செல்வப் பெடைவண்டோ-டூடா
முருகுடைய மாதர் முலைநனைக்கும் தண்தார்
அருகுடையான் வெண்குடையான் ஆங்கு 25


சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறம்கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்-மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்
ஒரு கூட்டில் வாழ உலகு 26

நளன் சோலை புகுதல்

வாங்குவளைக் கையார் வதன மதிபூத்த
பூங்குவளைக் காட்டிடையே போயினான் - தேங்குவளைத்
தேனாடி வண்டு சிறகுலர்த்தும் நீர்நாடன்
பூனாடிச் சோலை புக 27


வென்றி மதவேடன் வில்லெடுப்ப வீதியெலாம்
தென்றல் மதுநீர் தெளித்துவர-நின்ற
தளவேனல் மீதலரும் தாழ்வரைசூழ் நாடற்கு
இளவேனில் வந்தது எதிர் 28


தேரின் துகளைத் திருந்திழையார் பூங்குழலின்
வேரின் புனல்நனைப்ப வேயடைந்தான்-கார்வண்டு
தொக்கிருந்தா லித்துழலும் தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப்
புக்கிருந்தால் அன்ன பொழில் 29


நீணிறத்தாற் சோலை நிறம்பெயர நீடியதன்
தாணிறத்தாற் பொய்கைத் தலம்சிவப்ப மாணிறத்தான்
முன்னப்புள் தோன்றும் முளரித் தலைவைகும்
அன்னப்புள் தோன்றிற்றே ஆங்கு 30