பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

159




மன்னன் மனத்தெழுந்த மையல்நோய் அத்தனையும்
அன்னம் உரைக்க அகமுருகி-முன்னம்
முயங்கினாள் போல்தன் முலைமுகத்தைப் பாரா
மயங்கினாள் என்செய்வாள் மற்று? 56


வாவி யுறையும் மடவனமே என்னுடைய
ஆவி உவந்தளித்தாய் ஆதியால்-காவினிடைத்
தேர்வேந்தற் கென்னிலைமை சென்றுரைத்தி என்றுரைத்தாள்
பார்வேந்தன் பாவை பதைத்து 57


மன்னன் புயம்நின் வனமுலைக்குக் கச்சாகும்
என்ன முயங்குவிப்பேன் என்றன்னம்-பின்னும்
பொருந்தவன்பால் ஓதிமலர்ப் பூங்கணைகள் பாய
இருந்தவன்பால் போன தெழுந்து 58


கொற்றவன்தன் தேவிக்குக் கோமகன் தன் தோழியர்கள்
உற்ற தறியா உளநடுங்கிப்-பொற்றொடிக்கு
வேறுபா டுண்டென்றார் வேந்தனுக்கு மற்றதனைக்
கூறினாள் பெற்ற கொடி 59


கருங்குழலார் செங்கையினால் வெண்கவரிப் பைங்கால்
மருங்குலவ வார்முரசம் ஆர்ப்ப-நெருங்கு
பரிவளை நின்றேங்கப் போய்ப்புக்கான் பெற்ற
வரிவளைக்கை நல்லாள் மனை 60


கோதை சுமந்த கொடிபோல் இடைநுடங்கத்
தாதை திருவடிமேல் தான்வீழ்ந்தாள்-மீதெல்லாம்
காந்தாரம் பாடிக் களிவண்டு நின்றரற்றும்
பூந்தாரம் மெல்லோதிப் பொன் 61


பேரழகு சோர்கின்ற தென்னப் பிறைநுதன்மேல்
நீரரும்பத் தன்பேதை நின்றாளைப்-பாராக்
குலவேந்தன் சிந்தித்தான் கோவேந்தர் தம்மை
மலர்வேய்ந்து கொள்ளும் மணம் 62