பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

161






தேமொழிக்குத் தீதிலவே என்றான் திருந்தாரை
ஏமொழிக்கும் வேலான் எடுத்து 69


கொற்றவன்றன் ஏவலினால் போயக் குலக்கொடிபால்
உற்றதும் ஆங்கவள்தான் உற்றதுவும்-முற்றும்
மொழிந்ததே அன்னம் மொழிகேட் டரசற்கு
அழிந்ததே உள்ள அறிவு 70


கேட்ட செவிவழியே கேளா துணர்வோட
ஒட்டை மனத்தோ டுயிர்தாங்கி-மீண்டும்
குழியில் படுகரிபோல் கோமான் கிடந்தான்
தழலில் படுதளிர்போல் சாய்ந்து 71


கோதை சுயம்வரநாள் கொற்றவனுக் குற்றுரைப்ப
ஏதமிலாக் காட்சியர்வந் தெய்தினார்-போதில்
பெடையோடு வண்டுறங்கும் பேரொலிநீர் நாடன்
அடையாத வாயில் அகம் 72

தேர்பூட்டு என்றல்

காவலன்றன் தூதர் கடைக்கா வலர்க்கறிவித்
தேவலிற்போய் ஈதென் றியம்புதலும்-மாவில்
பொலிந்ததேர் பூட்டென்றான் பூவாளி பாய்
மெலிந்ததோள் வேந்தன் விரைந்து 73


கெட்ட சிறுமருங்குல் கீழ்மகளிர் நீள்வரம்பில்
இட்ட பசுங்குவளை ஏரடித்த கட்டி
கரையத்தேன் ஊறும் கடல்நாடன் ஊர்க்கு
விரையத்தேர் ஊரென்றான் வேந்து 74


சடைச்செந்நெல் பொன்விளைக்கும் தந்நாடு பின்னாகக்
கடல்தானை முன்னாகக் கண்டான் - அடற்கமைந்த
வல்லியரும் பொன்தாம வீமன் திருமகளாம்
நல்லுயிரும் வாழும் நகர் 75