பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

புகழேந்தி நளன் கதை




இந்திரனோடு நாரதன்


நெற்றித் தனிக்கண் நெருப்பைக் குளிர்விக்கும்
கொற்றத்தனியாழ்க் குலமுனிவன்-உற்றடைந்தான்
தேனாடும் தெய்வத் தருவும் திருமணியும்
வானாடும் காத்தான் மருங்கு 76


வீரர் விறல்வேந்தர் விண்ணாடு சேர்கின்றார்
ஆரும் இலரால் என்றையுற்று-நாரதனார்
நன்முகமே நோக்கினான் நாகம் சிறகரிந்த
மின்முகவேற் கையான் விரைந்து 77


வீமன் மடந்தை மணத்தின் விரைதொடுத்த
தாமம் புனைவான் சுயம்வரத்து-மாமன்னர்
போயினார் என்றான் புரந்தரற்குப் பொய்யாத
வாயினான் மாதவத்தோர் மன் 78


அழகு சுமந்திளைத்த ஆகத்தாள் வண்டு
பழகு கருங்கூந்தற் பாவை-மழகளிற்று
வீமன் குலத்துக்கோர் மெய்த்தீபம் மற்றவளே
காமன் திருவுக்கோர் காப்பு 79


மால்வரையை வச்சிரத்தால் ஈர்ந்தானும் வானவரும்
கோல்வளைதன் மாலைக் குறித்தெழுந்தார் சால்புடைய
விண்ணாடு நீங்கி விதர்ப்பன் திருநகர்க்கு
மண்ணாடு நோக்கி மகிழ்ந்து 80

நளனை இந்திரன் சந்தித்தல்

பைந்தெரியல் வேல்வேந்தன் பாவைபாற் போயினதன்
சிந்தை கெடுத்த தனைத் தேடுவான்-முந்தி
வருவான்போல் தேர்மேல் வருவானைக் கண்டார்
பெருவானின் தேவர் பெரிது 81


காவற் குடைவேந்தைக் கண்ணுற்ற விண்ணவர்கோன்
ஏவல் தொழிலுக் கிசையென்றான்-ஏவற்கு