பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

163





மன்னவனும் நேர்ந்தான் மனத்தினால் மற்றதனை
இன்னதென் றோரா திசைந்து 82


செங்கண் மதயானைத் தேர்வேந்தே தேமாலை
எங்களிலே சூட்ட இயல்வீமன்-மங்கைபால்
தூதாக என்றானத் தோகையைத்தன் ஆகத்தால்
கோதாக வென்றானக் கோ 83


தேவர் பணிதலைமேற் செல்லும் திரிந்தொருகால்
மேவுமிளங் கன்னிபால் மீண்டேகும்-பாவிற்
குழல்போல நின்றுழலும் கொள்கைத்தே பூவின்
நிழல்போலும் தண்குடையான் நெஞ்சு 84


ஆவ துரைத்தாய் அதுவே தலைநின்றேன்
தேவர்கோ னேயத் திருநகரில்-காவல்
கடக்குமா றென்னென்றான் காமநீர் ஆழி
அடக்குமா றுள்ளத் தவன் 85


வார்வெஞ் சிலையொழி வச்சிரத்தால் மால்வரையைப்
போர்வெஞ் சிறகறிந்த பொற்றோளான்-யாருமுனைக்
காணார்போய் மற்றவளைக் காணென்றான் கார்வண்டின்
பாணாறும் தாரானைப் பார்த்து 86


இசைமுகந்த வாயும் இயல்தெரிந்த நாவும்
திசைமுகந்தால் அன்ன தெருவும்-வசையிறந்த
பொன்னாடு போந்திருந்தாற் போன்றதே போர்விதர்ப்ப
நன்னாடற் கோமான்தன் நாடு 87

நளன் தமயந்தி சந்திப்பு

தேங்குவளை தன்னிலே செந்தா மரைமலரப்
பூங்குவளை தாமரைக்கே பூத்ததே-ஆங்கு
மதுநோக்கும் தாரானும் வாள்நுதலும் தம்மில்
பொதுநோக்கு எதிர்நோக்கும் போது 88