பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

புகழேந்தி நளன் கதை




உள்ளம்போய் நாண்போய் உரைபோய் வரிநெடுங்கண்
வெள்ளம்போய் வேகின்ற மென்தளிர்போல் - பிள்ளைமீன்
புள்ளரிக்கும் நாடன் திருமடந்தை பூவாளி
உள்ளரிக்கச் சோர்ந்தாள் உயிர் 102


பூவின்வாய் வாளி புகுந்த வழியேயென்.
ஆவியார் போனாலும் அவ்வழியே - பாவியேன்
ஆசைபோ காதென் றழிந்தாள் அணியாழின்
ஓசைபோல் சொல்லாள் உயிர்த்து 103


வையம் பகலிழப்ப வானம் ஒளியிழப்ப
பொய்கையும் நீள்கழியும் புள்ளிழப்ப - பையவே
செவ்வாய் அன்றில் துணையிழப்பச் சென்றடைந்தான்
வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு 104


மாயிரு ஞாலத் துயிர்காண வானரங்கில்
பாயிருள் என்னும் படாம்வாங்கிச் சேய்நின்று
அறைந்தா ரணம்பாட ஆடிப்போய் வெய்யோன்
மறைந்தான் குடபால் வரை 105

அந்திப் பொழுது

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லையென்னும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது 106


புற்கென்றார் அந்தி புனைமலர்க்கண் நீரரும்ப
நிற்கின்ற தந்தோ நிலங்காப்பான் - முற்கொண்டு
அடைகின்ற வேந்தர்க்கும் ஆண்டஞ்சி னோர்க்கும்
இடைநின்ற காலம்போல் இன்று 107

பிறை நிலவு

பைந்தொடியாள் ஆவி பருகுவான் நிற்கின்ற
அந்தி முறுவலித்த தாமென்ன - வந்ததால்