பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

புகழேந்தி நளன் கதை




உடைய மிடுக்கெல்லாம் என்மேல் ஒச்சி
விடிய மிடுக்கின்மை யாலோ - கொடியன்மேல்
மாகாதல் வைத்ததோ மன்னவர்தம் இன்னருளோ
ஏகாத தென்னோ இரா? 129


மயங்கும் தெளியும் மனநடுங்கும் வெய்துற்று
உயங்கும் வறிதே உலாவும் - வயங்கிழைபோய்ச்
சோரும் துயிலும் துயிலாக் கருநெடுங்கண்
நீரும் கடைசோர நின்று 130


விழுது படத்திணிந்த வீங்கிருள்வாய்ப் பட்டுக்
கழுதும் வழிதேடும் கங்குல் - பொழுதிடையே
நீருயிர்க்கும் கண்ணோடு நெஞ்சுருகி வீழ்வார்தம்
ஆருயிர்க்கு உண்டோ அரண் 131

பொழுது புலர்ந்தது

பூசுரர்தம் கைம்மலரும் பூங்குமுத மும்முகிழ்ப்பக்
காசினியும் தாமரையும் கண்விழிப்ப - வாசம்
அலர்ந்ததேங் கோதையின் ஆழ்துயரத் தோடு
புலர்ந்ததே அற்றைப் பொழுது 132


வில்லி கணையிழப்ப வெண்மதியம் சீரிழப்பத்
தொல்லை இருள்கிழியத் தோன்றினான் - வல்லி
மணமாலை வேட்டிடுந்தோள் வாளரசர் முன்னே
குணவாயில் செங்கதிரோன் குன்று 133


முரைசெறிந்த நாளேழும் முற்றியபின் கொற்ற
வரைசெறிந்த தோள்மன்னர் வந்தார் - விரைசெறிந்த
மாலை துவள முடிதயங்க வால்வளையும்
காலை முரசும் கலந்து 134


மன்றலந்தார் மன்னன் நடுவணைய வந்திருந்தான்
கன்று குதட்டிய கார்நீலம் - முன்றில்