பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

173




விடக்கதிர்வேற் காளை இவன்கண்டாய் மீனின்
தொடக்கொழியப் போய்நிமிர்ந்த தூண்டில் - மடற்கமுகின்
செந்தோடு பீறித்தேன் செந்நெற் பசுந்தோட்டில்
வந்தோடும் பாஞ்சாலர் மன் 149


அன்னம் துயிலெழுப்ப அந்தா மரைவயலில்
செந்நெல் அரிவார் சினையாமை - வன்முதுகில்
கூனிரும்பு தீட்டும் குலக்கோ சலநாடான்
தேனிருந்த சொல்லாயிச் சேய் 150


புண்டரிகம் தீயெரிவ போல்விரியப் பூம்புகைபோல் 
வண்டிரியும் தெண்ணீர் மகதர்கோன் - எண்டிசையில்
போர்வேந்தர் கண்டறியாப் பொன்னாவம் பின்னுடைய
தேர்வேந்தன் கண்டாயிச் சேய் 151

 


கூன்சங்கின் பிள்ளை கொடிப்பவளக் கோடிடறித்
தேன்கழியில் வீழத் திரைக்கரத்தால் - வான்கடல்வந்
தந்தோ எனவெடுக்கும் அங்கநா டாளுடையான்
செந்தேன் மொழியாயிச் சேய் 152


வெள்வாளைக் காளைமீன் மேதிக் குலமெழுப்பக்
கள்வார்ந்த தாமரையின் காடுழக்கிப் - புள்ளோடு
வண்டிரியச் செல்லும் மணிநீர்க் கலிங்கர்கோன்
தண்டெரியல் தேர்வேந்தன் தான் 153


அங்கை வரிவளையாய் ஆழித் திரைகொணர்ந்த
செங்கண் மகரத்தைத் தீண்டிப்போய்க் - கங்கயிடைச்
சேல்குளிக்கும் கேகயர்கோன் தெவ்வாடற் கைவரைமேல்
வேல்குளிக்க நின்றானிவ் வேந்து 154


மாநீர் நெடுங்கயத்து வள்ளைக் கொடிமீது
தானேகும் அன்னம் தனிக்கயிற்றில் - போம்நீள்
கழைக்கோ தையரேய்க்கும் காந்தார நாடன்
மழைக்கோதை மானேயிம் மன் 155