பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

புகழேந்தி நளன் கதை




அங்கை நெடுவேற்கண் ஆயிழையாய் வாவியின்வாய்ச்
சங்கம் புடைபெயரத் தான்கலங்கிச் - செங்கமலப்
பூச்சிந்தும் நாட்டேறல் பொன்விளைக்கும் தண்பணைசூழ்
மாச்சிந்து நாட்டானிம் மன் 156


காவலரைத் தன்சேடி காட்டக்கண் டீரிருவர்
தேவர் நளனுருவாச் சென்றிருந்தார் - பூவரைந்த
மாசிலாப் பூங்குழலாள் மற்றவரை காணாநின்று
ஊசலா டுற்றாள் உளம் 157


பூணுக் கழகளிக்கும் பொற்றொடியைக் கண்டக்கால்
நானுக்கு நெஞ்சுடைய நல்வேந்தர் - நீணிலத்து
மற்றேவர் வராதார் வானவரும் வந்திருந்தார்
பொற்றேர் நளனுருவாப் போந்து 158


மின்னுந்தார் வீமன்றன் மெய்மரபிற் செம்மைசேர்
கன்னியான் ஆகிற் கடிமாலை - அன்னந்தான்
சொன்னவனைச் சூட்ட அருள்ளென்றாள் சூழ்விதியின்
மன்னவனைத் தன்மனத்தே கொண்டு 159


நளனை அறிதல்

கண்ணிமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால்
வண்ண மலர்மாலை வாடுதலால் - எண்ணி
நறுந்தா மரைவிரும்பும் நன்னுதலே அன்னாள்
அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு 160


பொன்மாலை சூட்டினாள்

விண்ணரசர் எல்லாரும் வெள்கி மனஞ்சுளிக்கக்
கண்ணகன் ஞாலம் களிகூர - மண்ணரசர்
வன்மாலை தம்மனத்தே சூட வயவேந்தைப்
பொன்மாலை சூட்டினாள் பொன் 161


திண்டோள் வயவேந்தர் செந்தா மரைமுகம்போய்
வெண்டா மரையாய் வெளுத்தவே - ஒண்டரளக்