பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

புகழேந்தி நளன் கதை




செருக்கதிர்வேல் கண்ணியுடன் தேர்வேந்தன் கூட
இருக்கத் தரியேன் இவரைப் - பிரிக்க
உடனாக என்றான் உடனே பிறந்த
விடநாகம் அன்னான் வெகுண்டு 169

மண வாழ்க்கை

வெங்கதிரோன் தானும் விதர்ப்பன் திருமடந்தை
மங்கலநாள் காண வருவான்போல் - செங்குமுதம்
வாயடங்க மன்னற்கும் வஞ்சிக்கும் நன்னெஞ்சில்
தீயடங்க ஏறினான் தேர் 170


இன்னுயிர்க்கு நேரே இளமுறுவல் என்கின்ற
பொன்னழகைத் தாமே புதைப்பார்போல் - மென்மலரும்
சூட்டினார் சூட்டித் துடிசேர் இடையாளைப்
பூட்டினார் மின்னிமைக்கும் பூண் 171


கணிமொழிந்த நாளிற் கடிமணமும் செய்தார்
அணிமொழிக்கும் அண்ண லவற்கும் - பணிமொழியார்
குற்றேவல் செய்யக் கொழும்பொன் அறைபுக்கார்
மற்றெவரும் ஒவ்வார் மகிழ்ந்து 172


செந்திருவின் கொங்கையினும் தேர்வேந்த னாகத்தும்
வந்துருவ வார்சிலையைக் கால்வளைத்து - வெந்தீயும்
நஞ்சும் தொடுத்தனைய நாம மலர்வாளி
அஞ்சும் தொடுத்தான் அவன் 173


ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி
இருவரெனும் தோற்ற மின்றிப் - பொருவெங்
கனற்கேயும் வேலானுங் காரிகையுஞ் சேர்ந்தார்
புனற்கே புனல்கலந்தாற் போன்று 174


குழைமேலும் கோமா னுயிர்மேலும் கூந்தல்
மழைமேலும் வாளோடி மீள - விழைமேலே