பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

177




அல்லோடும் வேலான் அகலத்தோ டும்பொருதாள்
வல்லோடும் கொங்கை மடுத்து 175


வீரனக லச்செறுவின் மீதோடிக் குங்குமத்தின்
ஈரவிள வண்ட லிட்டதே - நேர்பொருத
காராரும் மெல்லோதிக் கன்னியவள் காதலெனும்
ஓராறு பாய வுடைந்து 176


கொங்கை முகங்குழையக் கூந்தல் மழைகுலையச்
செங்கயற்க ணோடிச் செவிதடவ - அங்கை
வளைபூச லாட மடந்தையுடன் சேர்ந்தான்
விளைபூசற் கொல்யானை வேந்து 177


தையல் தளிர்கரங்கள் தன்தடக்கை யாற்பற்றி
வையம் முழுதும் மகிழ்தூங்கத் - துய்ய
மணந்தான் முடிந்ததற்பின் வாணுதல் தானும்
புணர்ந்தார் நெடுங்காலம் புக்கு 178


2. கலிதொடர் காண்டம்

முந்தை மறைநூல் முடியெனலாம் தண்குருகூர்ச்
செந்தமிழ் வேத சிரமெனலாம் - நந்தும்
புழைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும்
அழைக்கைக்கு முன்செல் அடி 179


செக்கர் நெடுவானில் திங்கள் நிலாத்துளும்பி
உக்க தெனச்சடைமேல் உம்பர்நீர் - மிக்கொழுகும்
வெள்ளத்தான் வெள்ளி நெடுங்கிரியான் மெய்யன்பர்
உள்ளத்தான் எங்கட் குளன் 180

வழிநடைக் காட்சிகள்

தவளத் தனிக்குடையின் வெண்ணிழலும் தையல்
குவளைக் கருநிழலும் கொள்ளப் - பவளக்