பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

179




புல்லென்ற கோலத்துப் பூவையரைப் போன்றதே
அல்லென்ற சோலை அலகு 188


கொங்கை முகத்தணையக் கூட்டிக் கொடுங்கையால்
அங்கணைக்க வாய்நெகிழ்ந்த ஆம்பற்பூ-கொங்கவிழ்தேன்
வார்க்கின்ற கூந்தன் முகத்தை மதியென்று
பார்க்கின்ற தென்னலாம் பார் 189


கொய்த குவளை கிழித்துக் குறுநுதன்மேல்
எய்தத் தனிவைத்த ஏந்திழையாள்-வையத்தார்
உண்ணாக் கடுவிடத்தை யுண்ட வொருமூன்று
கண்ணானைப் போன்றனளே காண் 190


கொழுநன் கொழுந்தாரை நீர்விசக் கூசிச்
செழுமுகத்தைத் தாமரைக்கே சேர்த்தாள்-கெழுமியவக்
கோமகற்குத் தானிணைந்த குற்றங்கள் அத்தனையும்
பூமகட்குச் சொல்லுவாள் போல் 191


பொய்தற் கமலத்தின் போதிரண்டைக் காதிரண்டில்
பெய்து முகமூன்று பெற்றாள்போல்-எய்த
வருவாளைப் பாரென்றான் மாற்றாரை வென்று
செருவாளைப் பார்த்துவக்கும் சேய் 192


பொன்னுடைய வாசப் பொகுட்டு மலரலையத்
தன்னுடனே மூழ்கித் தனித்தெழுந்த-மின்னுடைய
பூணாள் திருமுகத்தைப் புண்டரிகம் என்றயிர்த்துக்
காணா தயர்வானைக் காண்க 193


சிறுக்கின்ற வாண்முகமும் செங்காந்தட் கையால்
முறுக்குநெடு மூரிக் குழலும்-குறிக்கின்
கரும்பாம்பு வெண்மதியைக் கைக்கொண்ட காட்சி
அரும்பாம் பணைமுலையாய் ஆம் 194


சோர்புனலில் மூழ்கி எழுவாள் சுடர்நுதல்மேல்
வார்குழலை நீக்கி வருந்தோற்றம்-பாராய்