பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

183



அடற்கதிர்வேல் மன்னன் அவனேற்றின் முன்போய்
எடுத்தகொடி என்னகொடி என்ன-மிடற்சூது
வெல்லும் கொடியென்றான் வெங்கலியால் அங்கவன்மேல்
செல்லும் கொடியோன் தெரிந்து 215


ஏன்றோம் இதுவாயின் மெய்ம்மையே எம்மோடு
வான்றோய் மடல்தெங்கின் வான்தேறல்-தான்தேக்கி
மீதாடி வாளைவயல் வீந்துழக்கும் நன்னாடன்
சூதாட என்றான் துணிந்து 216

சூதின் தீமைகள்

காதல் கவறாடல் கள்ளுண்டல் பொய்ம்மொழிதல்
ஈதல் மறுத்தல் இவைகண்டாய்-போதில்
சினையாமை வைகும் திருநாடா செம்மை
நினையாமை பூண்டார் நெறி 217


அறத்தைவேர் கல்லும் அருநரகிற் சேர்க்கும்
திறத்தையே கொண்டருளைத் தேய்க்கும்-மறத்தையே
பூண்டுவிரோ தஞ்செய்யும் பொய்ச்சூதை மிக்கோர்கள்
தீண்டுவரோ வென்றார் தெரிந்து 218


உருவழிக்கும் உண்மை உயர்வழிக்கும் வண்மைத்
திருவழிக்கும் மாணஞ் சிதைக்கும்-மருவும்
ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்ல சூது
பொருவரோ தக்கோர் புரிந்து 219


ஆயம் பிடித்தாரும் அல்லற் பொதுமகளிர்
நேயம் பிடித்தாரும் நெஞ்சிடையே-மாயம்
பிடித்தாரின் வேறல்ல ரென்றுரைப்ப தன்றே -
வடித்தாரின் நூலோர் வழக்கு 220