பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

புகழேந்தி நளன் கதை




வேலை கரையிழந்தால் வேத நெறிபிறழ்ந்தால்
ஞாலம் முழுதும் நடுவிழந்தால்-சீலம்
ஒழிவரோ செம்மை உரைதிறம்பாச் செய்கை
அழிவரோ செங்கோ லவர்.  234


வடியேறு கூரிலைவேன் மன்னாவோ உன்றன்
அடியேற்கட் காதரவு தீரக்-கொடிநகரில்
இன்றிருந்து நாளை எழுந்தருள்க என்றுரைத்தார்
வென்றிருந்த தோளான்றாள் வீழ்ந்து 235


மன்றலிளங் கோதை முகநோக்கி மாநகர்வாய்
நின்றுருகு வார்கண்ணி னிர்நோக்கி-இன்றிங்
கிருத்துமோ வென்றா னிளங்குதலை வாயாள்
வருத்தமோ தன்மனத்தில் வைத்து 236


வண்டாடும் தார்நளனை மாநகரில் யாரேனும்
கொண்டாடினார் தம்மைக் கொல்லென்று-தண்டா
முரசறைவா யாங்கென்றான் முன்னே முனிந்தாங்
கரசறியா வேந்த னழன்று237


அறையும் பறையரவங் கேட்டழிந்து நைந்து
பிறைநுதலாள் பேதமையை நோக்கி-முறுவலியா
இந்நகர்க்கீ தென்பொருட்டா வந்த தெனவுரைத்தான்
மன்னகற்றும் கூரிலைவேன் மன். 238


தன்வாயில் மென்மொழியே தாங்கினான் ஓங்குநகர்ப்
பொன்வாயில் பின்னாகப் போயினான்-முன்னாளில்
பூமகளைப் பாரினொடு புல்லினான் தன்மகனைக்
கோமகளைத் தேவியொடுங் கொண்டு239


கொற்றவன்பால் செல்வாரைக் கொல்வான் முரசறைந்து
வெற்றியோடு புட்கரனும் வீற்றிருப்ப-முற்றும்
இழவு படுமாபோல் இல்லங்க டோறும்
குழவிபா லுண்டிலவே கொண்டு240