பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

193


காரிகைதன் வெந்துயரம் காணாமல் நீத்தந்தக் கூரிருளிற் போவான் குறித்தெழுந்து - நேரே இருவர்க்கும் ஒருயிர்போ லெய்தியதோர் ஆடை அரிதற் கவனினைந்தா னாங்கு 280

எண்ணிய எண்ணம் முடிப்ப இகல்வேந்தன் கண்ணி யதையறிந்து காய்கலியும் - பண்ணினுக்குக் கேளான தேமொழியை நீங்கக் கிளரொளிசேர் வாளாய் மருங்கிருந்தான் வந்து 281

ஒற்றைத் துகிலும் உயிரும் இரண்டாக முற்றுந்தன் அன்பை முதலோடும் - பற்றி அரிந்தான் அரிந்திட்ட டவள்நிலைமை நெஞ்சில் தெரிந்தான் இருந்தான் திகைத்து 282

போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேகும் ஆயர் கொணர்ந்த அடுபாலின் - தோயல் கடைவார்தம் கைபோல ஆயிற்றே காலன் வடிவாய வேலான் மனம் 283

சிந்துரத்தான் தெய்வ முனிவன் தெரிந்துரைத்த மந்திரத்தால் தம்பித்த மாநீர்போல் - முந்த ஒளித்ததேர்த்தானை உயர்வேந்தன் நெஞ்சம் வலித்ததே தீக்கலியால் வந்து 284

தமயந்தியைப் பிரிதல்


தீக்கானகத்துறையும் தெய்வங்காள் வீமன்தன் கோக்காதலியைக் குறிக்கொண்மின் - நீக்காத காதலன்பு மிக்காளைக் காரிருளிற் கைவிட்டின் றேதிலன்போல் போகின்றேன் யான் 285

ஏந்தும் இளமுலையாள் இன்னுயிரும் தன்னருளும் பூந்துகிலும் வேறாகப் போயினான் - தீந்தேன்