பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

புகழேந்தி நளன் கதை


தொடைவிரவு நாள்மாலை சூட்டினாள் தன்னை
இடையிருளில் கானகத்தே இட்டு 286

தாருவெனப் பார்மேல் தருசந்த திரன்சுவர்க்கி
மேருவரைத் தோளான் விரவார்போல் - கூரிருளில்
செங்கோ னகஞ்சிதையத் தேவியைவிட் டேகினான்
வெங்கா னகந்தனிலே வேந்து287

தமயந்தி துயர்


நீலம் அளவே நெகிழ நிரைமுத்தின
கோல மலரின் கொடியிடையாள் - வேல்வேந்தே
எங்குற்றாய் என்னா இனவளைக்கை நீட்டினாள்
அங்குத்தான் காணாதயர்ந்து288

உடுத்த துகிலரிந்த தொண்டொடியாள் கண்டு
மடுத்த துயிலான் மறுகி - அடுத்தடுத்து
மன்னேயென அழைப்பாள் மற்றுமவ னைக்கானா
தென்னேயிஃ தென்னென் றெழுந்து289

வெய்ய தரையென்னும் மெல்லமளி யைத்தடவிக்
கையளிக்கொண் டெவ்விடத்தும் காணாமல் - ஐயகோ
என்னப்போய் வீழ்ந்தாள் இனமேதி மென்கரும்பைத்
தின்னப்போம் நாடன் திரு290

அழல்வெஞ் சிலைவேடன் அம்புருவ ஆற்றா
துழலுங் களிமயில்போல் ஓடிக் - குழல்வண்
டெழுந்தோட வீழ்ந்தாள் இருங்குழைமேல் கண்ணித்
கொழுந்தோட வீமன் கொடி291

வான்முகிலும் மின்னும் வறுநிலத்து வீழ்ந்ததுபோல்
தானும் குழலும் தனிவீழ்ந்தாள் - ஏனம்
குளம்பான் மணிகிளைக்கும் குண்டுநீர் நாடன்
இளம்பாவை கைதலைமேல் இட்டு292