பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

199


அந்தா மரையி லவளேயென்றையுற்றுச்
சிந்தா குலமெனக்குத் தீராதால் - பைந்தொடியே
உள்ளவாறெல்லாம் உரையென்றாள் ஒண்மலரின்
கள்ளவார் கூந்தலாள் கண்டு 319

என்னைத் தனிவனத்திட் டெங்கோன் பிரிந்தேக
அன்னவனைக் காணா தலமருவேன் - இந்நகர்க்கே
வந்தே னிதுவென் வரவென்றாள் வாய்புலராச்
செந்தேன் மொழிபதறாச் சோர்ந்து 320

உன்ற்லைவன் தன்னை யொருவகையால் நாடியே
தந்து விடுமளவும் தாழ்குழலாய் - என்றனுடன்
இங்கே இருக்க இனிதென்றாளேந்திழையைக்
கொங்கேயுந் தாராள் குறித்து 321

ஈங்கிவளிவ்வாறிருப்ப இன்னலுழந் தேயேகிப்
பூங்குயிலும் போர்வேற் புரவலனும் - யாங்குற்றார்
சென்றுணர்தி என்று செலவிட்டான்
குன்றுறழ்தோள் வீமன் குறித்து 322

ஓடும் புரவித்தேர் வெய்யோன் ஒளிசென்று
நாடும் இடமெல்லாம் நாடிப்போய் - கூடினான்
போதிற் றிருநாடும் பொய்கைத் திருநாடாஞ்
சேதித் திருநாடு சென்று 323

தாமஞ்சே ரோதித் தமயந்தி நின்றாளை
ஆமென்றறியா அருமறையோன் - வீமன்
கொடிமேல் விழுந்தழுவான் கொம்புமவன் செம்பொன்
அடிமேல் விழுந்தாள் அழுது 324

மங்கை விழிநிர் மறையோன் கழல்கழுவ
அங்கவன்றன் கண்ணிரவளுடன்மேற் - பொங்கக்
கடல்போலுங் காதலார் கையற்றோர் தங்கள்
உடல்போலும் ஒத்தார் உயிர் 325