பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

201


ஓய்ந்துநா நீர்போய் உலர்கின்ற தொத்ததமர்
நீந்தினார் கண்ணி னின்று. 332

பணியிருளிற் பாழ்மண்டபத்திலே யுன்னை
நினையாது நீத்தகன்ற போது - தனியேநின்
றென்னிணைந்து என்செய்தாய் என்னாப் புலம்பினாள்
பொன்னினைத்தாய் நோக்கிப் புலர்ந்து 333


3. கலி நீங்கு காண்டம்


மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்
காலிக்குப் பின்னேயுங்காணலாம் - மால்யானை
முந்தருளும் வேத முதலே யெனவழைப்ப
வந்தருளும் செந்தா மரை 334

போதுவார் நீறணிந்து பொய்யாத ஐந்தெழுத்தை
ஒதுவார் உள்ளம் எனவுரைப்பார் - நீதியார்
பெம்மான் அமரர் பெருமான் ஒருமான்கை
அம்மானின் றாடும் அரங்கு 335

மன்னா உனக்கபயம் என்னா வனத்தீயிற்
பன்னாக வேந்தன் பதைத்துருகிச் - சொன்ன
மொழிவழியே சென்றான் முரட்கலியின் வஞ்சப்
பழிவழியே செல்கின்றான் பார்த்து 336

ஆரும் திரியா அரையிருளில் அங்ஙனமே
சோர்குழலை நீத்த துயரோடும் - வீரன்
திரிவானத் தீக்கானிற் செந்தீயின் வாய்ப்பட்
டெரிவானைக் கண்டான் எதிர் 337

தீக்கடவுள் தந்த வரத்தைத் திருமணத்தில்
ஆக்கி யருளால் அரவரசைப் - போக்கி
அடைந்தான் அடைதலுமே ஆரழலோன் அஞ்சி
உடைந்தான் போய்ப்புக்கான் உவந்து 338