பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

புகழேந்தி நளன் கதை


வேத முனியொருவன் சாபத்தால் வெங்கானில்
ஆதபத்தின் வாய்ப்பட்டழிகின்றேன் - காதலால்
வந்தெடுத்துக் காவென்றான் மாலை மணிவண்டு
சந்தெடுத்த தோளானைத் தான் 339

சீரியாய் நீயெடுப்பத் தீமை கெடுகின்றேன்
கூருந் தழலவித்துக் கொண்டுபோய் - பாரில்
விடுகென்றான் மற்றந்த வெந்தழலால் வெம்மைப்
படுகின்றான் வேல்வேந்தைப் பார்த்து 340

என்றுரைத்த அவ்வளவிலேழுலகுஞ் சூழ்கடலும்
குன்றுஞ் சுமந்த குலப்புயத்தான் - வென்றி
அரவரசைக் கொண்டகன்றான் ஆரணியம் தன்னின்
இரவரசை வென்றான் எடுத்து 341

மண்ணின்மீதென்றனைநின் வன்றாளால் ஒன்றுமுதல்
எண்ணித் தசவென் றிடுகென்றான் - நண்ணிப்போர்
மாவலான் செய்த உதவிக்கு மாறாக
ஏவலாற் றீங்கிழைப்பே னென்று 342

ஆங்கவன்றான் அவ்வாறுரைப்ப அதுகேட்டுத்
தீங்கலியாற் செற்ற திருமணத்தான் - பூங்கழலை
மண்ணின்மேல் வைத்துத் தசவென்று வாய்மையால்
எண்ணினால் வைத்தான் எயிறு 343

ஆற்ற லரவரசே யீங்கென் னுருவத்தைச்
சீற்றமொன் றின்றிச் சினவெயிற்றால் - மாற்றுதற்கின்
றென்கா ரணமென்றான் ஏற்றமளிற் கூற்றழைக்கும்
மின்கா லயின்முகவேல் வேந்து 344

ஆகம் குறுகுதல்


வீமன் மடந்தை விழிமுடியக் கண்டறியா
வாம நெடுந்தோள் வறியோருக் - கேமங்