பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

203


கொடாதார் ஆகம்போற் குறுகிற்றே மெய்ம்மை
விடாதான் திருமேனி வெந்து 345

காயும் கடகளிற்றாய் கார்க்கோ டகனென்பேர்
நீயிங்கு வந்தமை யானிணைந்து - காயத்தை
மாறாக்கிக் கொண்டு மறைந்துறைதல் காரணமா
வேறாக்கிற் றென்றான் விரைந்து 346

கூனிறால் பாயக் குவளை தவளைவாய்த்
தேனிறால் பாயும் திருநாடா - கானில்
தணியாத வெங்கனலைத் தாங்கினாய் இந்த
அணியாடை கொள்கென்றான் ஆங்கு 347

சாதிமணித்துகில்நீ சாத்தினால் தண்கழுநீர்ப்
போதின்கீழ் மேயும் புதுவரால் - தாதின்
துளிக்குநா நீட்டுந் துறைநாடர் கோவே
ஒளிக்குநாள் நீங்கும் உரு348

வாகுவன் ஆதல்


வாகு குறைந்தமையால் வாகுவனென்றுன்னாமம்
ஆக வயோத்தி நகரடைந்து - மாகனகத்
தேர்த்தொழிற்கு மிக்கானியாகென்றான் செம்மனத்தாற்
பார்த்தொழிற்கு மிக்கானைப் பார்த்து 349

இணையாரும் இல்லான் இழைத்த உதவி
புணையாகச் சூழ்கானிற் போனான் - பணையாகத்
திண்ணாக மோரெட்டுந் தாங்குந் திசையனைத்தும் 350
எண்ணாக வேந்த னெழுந்து

நினைப்பென்னும் காற்றசைப்ப நெஞ்சிடையே மூளும்
கனற்புகைய வேகின்றான் கண்டான் - பனிக்குருகு
தண்படாம் நீழல் தனிப்பேடை பார்த்திரவு
கண்படா வேலைக் கரை 351