பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

205


தார்வேந்தற் கென்வரவு தானுரைமின் என்றுரைத்தான்
தேர்வேந்தன் வாகுவனாய்ச் சென்று 358

அம்மொழியைத் தூதர் அரசற்கு அறிவிக்கச்
செம்மொழியாத் தேர்ந்ததனைச் சிந்தித்தே - இம்மொழிக்குத்
தக்கானை இங்கே தருமி னெனவுரைக்க
மிக்கானும் சென்றான் விரைந்து 359

பொய்யடையாச் சிந்தைப் புரவலனை நோக்கித்தன்
செய்ய முகமலர்ந்து தேர்வேந்தன் - ஐயாநீ
எத்தொழிற்கு மிக்காய்யாது பெயரென்றான்
கைத்தொழிற்கு மிக்கானைக் கண்டு 360

அன்னம் மிதிப்ப அலர்வழியும் தேறல்போய்ச்
செந்நெல் விளைக்குந் திருநாடர் - மன்னா
மடைத்தொழிலும் தேர்த்தொழிலும் வல்லவன்யான் என்றான்
கொடைத்தொழிலின் மிக்கான் குறித்து 361

தமயந்தி வேதியனை அனுப்புதல்


என்னை இருங்கானில் நீத்த இகல்வேந்தன்
தன்னைநீ நாடுகெனத் தண்கோதை - மின்னுப்
புரைகதிர்வேல் வேந்தன் புரோகிதனுக் கிந்த
உரைபகர்வ தானாள் உணர்ந்து 362

காரிருளில் பாழ்மண்டபத்தேதன் காதலியைச்
சோர்துயிலின் நீத்தல் துணிவன்றோ - தேர்வேந்தற்
கென்றறைந்தால் நேர்நின் றெதிர்மாற்றம் தந்தாரைச்
சென்றறிந்து வாவென்றாள் தேர்ந்து 363

மின்னாடும் மால்வரையும் வேலையும் வேலைசூழ்
நன்னாடும் கானகமும் நாடினான் - மன்னு
கடந்தாழ் களியானைக் காவலனைத் தேடி
அடைந்தான் அயோத்தி நகர் 364