பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

209


நெய்தற் கவாவும் நெடுநாட நீயென்பால்
எய்தற் கவியவாறென்? 384

இன்றுன்னைக் காண்பதோ ராதரவால் யானிங்ஙன்
மன்றல் மலர்த்தாராய் வந்தடைந்தேன் - என்றான்
ஒளியார் கண்ணாள்மேல் உள்ளம் துரப்பத்
தெளியாது முன்போந்த சேய் 385

ஆதி நெடுந்தேர்ப் பரிவிட் டவையாற்றிக்
கோதில் அடிசிற் குறைமுடிப்பான் - மேதிக்
கடைவாயிற் கார்நீலம் கண்விழிக்கும் நாடன்
மடைவாயிற் புக்கான் மதித்து 386

ஆதி மறைநூல் அனைத்தும் தெரிந்துணர்ந்த
நீதி நெறியாளர் நெஞ்சம்போல் - யாதும்
நிரப்பாமல் எல்லாம் நிரம்பிற்றே பொற்றேர்
வரப்பாகன் புக்க மனை 387

மக்களை அனுப்பி வைத்தல்


இடைச்சுரத்தில் தன்னை இடையிருளில் நீத்த
கொடைத் தொழிலான் என்றயிர்த்த கோமான் - மடைத்தொழில்கள்
செய்கின்ற தெல்லாம் தெரிந்துணர்ந்து வாவென்றாள்
நைகின்ற நெஞ்சாள் நயந்து 388

கோதை நெடுவேற் குமரனையும் தங்கையையும்
ஆதி அரசன் அருகாகப் - போத
விளையாட விட்டவன்மேற் செயல்நாடென்றாள்
வளையாடுங் கையாள் மதித்து 389

உரையாடல்கள்


மக்களைமுன் காணா மனநடுங்கா வெய்துயிராப்
புக்கெடுத்து வீரப் புயத்தணையா - மக்காள்நீர்