பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

புகழேந்தி நளன் கதை



இந்த மலைகடந்தேழுமலைக் கப்புறமா
விந்தமெனும் நம்பதிதான் மிக்கு 415

இக்கங்குல் போக இகல்வேல் நளனெறிநீர்
செய்க்கங்கு பாயுந் திருநாடு - புக்கங்கு
இருக்குமா காண்பான்போல் ஏறினான் குன்றிற்
செருக்குமான் தேர்வெய்யோன் சென்று 416

நாடு திரும்புதல்


மன்றலிளங் கோதையொடு மக்களுந் தானுமொரு
வென்றி மணிநெடுந்தேர் மேலேறிச் - சென்றடைந்தான்
மாவிந்த மென்னும் வளநகரஞ் சூழ்ந்தொரு
பூவிந்தை வாழும் பொழில் 417

மற்றவனுக் கென்வரவு சொல்லி மறுசூதுக்
குற்ற பணையம் உளதென்று - கொற்றவனைக்
கொண்டணை வீரென்று குலத்து தரைவிடுத்தான்
தண்டெரியல் தேர்வேந்தன் தான் 418

மறு ஆதாடுதல்


மாய நெடுஞ்சூதில் வஞ்சித்த வன்னெஞ்சன்
தூய நறுமலர்ப்பூஞ்சோலைவாய் - ஆய
பெருந்தானை சூழப் பெடைநடையாளோடும்
இருந்தானைக் கண்டான் எதிர். 419

செங்கோல் அரசன் முகம்நோக்கித் தேர்ச்சியிலா
வெங்கோல் அரசன் வினவினான் - அங்கோலக்
காவற் கொடைவேந்தே காதலர்க்கும் காதலிக்கும்
யாவர்க்கும் தீதிலவே என்று 420

தீது தருகலிமுன் செய்ததனை யோராதே
யாது பணயம் எனவியம்பச் - சூதாட
மையாழி யிற்றுயிலும் மாலனையாள் வண்மைபுனை
கையாழி வைத்தான் கழித்து 421