பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

215


அப்பலகை யொன்றின் அருகிருந்தோர் தாமதிக்கச்
செப்பரிய செல்வத் திருநகரும் - ஒப்பரிய
வன்றானை யோடு வளநாடும் வஞ்சனையால்
வென்றானை வென்றானவ் வேந்து 422

ஆட்சி திரும்பப் பெறுதல்


அந்த வளநாடும் அவ்வரசும் ஆங்கொழிய
வந்த படியே வழிக்கொண்டான் - செந்தமிழோர்
நாவேய்ந்த சொல்லான் நளனென்று போற்றிசைக்கும்
தேர்வேந்தற் கெல்லாம் கொடுத்து 423

ஏனை முடிவேந்தர் எத்திசையும் போற்றிசைப்பச்
சேனை புடைசூழத் தேரேறி - ஆனபுகழ்ப்
பொன்னகரம் எய்தும் புரந்தரனைப் போற்பொலிந்து
நன்னகரம் புக்கான் நளன் 424

மாநகர் அடைந்த மகிழ்ச்சி


கார்பெற்ற தோகையோ கண்பெற்ற வாண்முகமோ
நீர்பெற்றுயர்ந்த நிறைபுலமோ - பார்பெற்று
மாதோடு மன்னன் வரக்கண்ட மாநகருக்கு
ஏதோ உரைப்பன் எதிர்? 425

வென்றி நிடதத்தார் வேந்தன் சரிதையீ
தென்றுரைத்த வேத யியல்முனிவன் - நன்றிபுனை
மன்னா பருவரலை மாற்றுதியென் றாசிமொழி
பன்னா நடந்திட்டான் பண்டு 426

வாழி அருமறைகள் வாழிநல் அந்தணர்கள்
வாழிநளன் காதை வழுத்துவோர் - வாழிய
மள்ளுவநாட் டாங்கண் வருசந்திரன்சுவர்க்கி
தெள்ளுறமெய்க்க கீர்த்தி சிறந்து. 427

☆ ☆ ☆