பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

புகழேந்தி நளன் கதை



வாய்ப்பட்டது போல் துயிலின்றிக் கழித்தவள் முன் பொழுது புலர்ந்தது; அவள் துயரும் புலர்ந்தது. சுறுசுறுப்பு அவளை இசைக்க வைத்தது. உயிரோட்டம் அவள் செயலோட்டத்தில் காணப்பட்டது.

கிழக்கு மலையில் கதிரவன் தோன்றினான். அங்கேயும் மலைதான் இருந்தது. மேற்கு மலையில் படிந்தான்; கிழக்கு மலையில் எழுந்தான். இரவு எல்லாம் ஆட்டம் போட்ட மன்மதன் தன் வில்லினை முடக்கி வைத்தான். காய்ந்த நிலா ஒய்ந்து அடங்கியது. நிலவைக் கண்டு இனி அவள் அஞ்சத் தேவையில்லாமல் போயிற்று. மூடிய இருள் ஒடிய இடம் தெரியாமல் மறைந்து விட்டது. அரசர்கள் பொழுது வரும்; விடியும் என்று காத்திருந்தனர். அவர்கள் உள்ளம் எழுச்சி பெற்றது. எண்ணங்களில் மலர்ச்சி அரும்பியது. தமயந்தி பெயரை அவர்கள் நா உச்சரித்தது.

காலை முரசும் கனை துயில் எழுப்பியது. மண்ணரசர்கள் எல்லாரும் மணி மண்டபம் நோக்கிச் சென்றனர். அவரவர்க்கு வகுத்த ஆதனங்களைத் தேடி அழகுடன் அமர்ந்தனர். இன்னாருக்கு இன்ன இடம் என வகுத்து அளிக்கப்பட்டிருந்தது. எழுதி வைத்தபடி எல்லாம் நடை பெற்றது.

நளன் இரவு எல்லாம் தமயந்தியைப் போலவே காத்திருந்தான். நம்பிக்கை அவன் மனத்தை தளரவிடாமல் தடுத்தது. மறுபடியும் தான் கண்ட அந்தப் பாவையைக் காணத் தவம் செய்தவனாய் இருந்தான். அவள் கடைக் கண் பார்வைக்காக அவன் காத்திருந்தான். அவனுக்காகவே பொழுது விரைவில் விடிந்தது என்பது போல இருந்தது. அவனுக்கு அகமகிழ்வு அளித்தது.

தமயந்தியின் வருகைக்காக இந்த மன்னர்கள் காத்திருந்தனர். அவர்கள் அவள் அணிந்திருந்த நித்திலத் தோடு