பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் பரிசீலிக்கப்பட்டது.
40
புகழேந்தி நளன் கதை
 


தாமரை பூத்த பொய்கையில் அன்னம் ஒன்று மெல்ல நடந்து வருவது போன்று அவள் காட்சி அளித்தாள்.

விழித்த கண்மூடாமல் அவளையே நோக்கினர்; அவள் அவர்கள் பார்வையில் அகப்பட்டவள் ஆயினாள். வலையில் இருந்து தப்ப முடியாத மயிலோ என்று அவள் விளங்கினாள்.

அரசர்கள் ஒவ்வொருவரும் அவள் தன் அருகில் வருவாள் என்று காத்து இருந்தனர்.

அவளுடன் வந்த ஒருத்தி இந்த அரசர்களைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து வைத்திருந்தாள். இவர்கள் நாடு யாது; குலம் யாது; வெற்றிச் சிறப்பு யாது; வரலாறு யாது என்பனவற்றை எல்லாம் அறிந்து வைத்திருந்தாள்.

பட்ட விழாவில் மாணவர்களை ஆளுநர்முன் அறிமுகம் செய்வதுபோல் இவர்களை அவள் அறிமுகம் செய்தாள்.

சோழ நாட்டு அரசனுக்கு முதன்மை இடம் தரப் பட்டது. தமிழுக்கு அவர்கள் மதிப்புத் தந்தார்கள். காவிரி பாயும் நாடு அவன் நாடு என்று அறிமுகம் செய்து வைத்தாள். “பொன்னி அமுதம் புதுக்கொழுந்து பூங்கமுகின் சென்னி தடவும் திருநாடன்” என்று அறிமுகம் செய்து வைத்தாள். தமிழ்க் கவிதை மொழி அவள் அறிமுகத்தில் சுவையோடு வெளிப்பட்டது.

சோறு தந்த சோழ நாடு அதன் பெருமை பேசப்பட்டது. பாண்டியன் தன்னைப் பற்றிச் சேடி என்ன கூறப்போகிறாள் என்பதை எதிர்பார்த்தான். தமிழ் வளர்த்த சங்கம் குறித்து அவள் முழங்குவாள் என்று எதிர்பார்த்தாள்.

அவள் புராணம் படித்தவள்; கோயில் கூட்டங்களில் அவள் சென்று கேட்டிருக்கிறாள். செண்டு கொண்டு