பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

புகழேந்தி நளன் கதை



இருக்கலாம். அவன் நேர்மை தவற விரும்பவில்லை; மாலையிடுவது அவள் பொறுப்பு; அதில் அவன் தலையிட விரும்பவில்லை; தேவர்கள் கண்ணிமைக்காமல் காத்து இருந்தனர்.

அவள் தன் காதலில் நம்பிக்கை வைத்தாள். தன் கற்பில் உறுதி வைத்தாள். நிச்சயம் தவறு செய்ய நேராது என்று நம்பிக்கை வைத்தாள். வீமன் ஒரே மகள், குல விளக்கு என்று பேசப்பட்டவள்; தன் குடிப்பிறப்பில் அவளுக்கு நம்பிக்கை இருந்தது. தேர்வில் வெற்றி பெறத் தன் கற்பில் நம்பிக்கை வைத்தாள். தவறு செய்ய மாட்டோம் என்ற நம்பிக்கை பிறந்தது.

மறுபடியும் அவர்களைப் பார்த்தாள். நளன் எந்தக் குறிப்பும் காட்டவில்லை; அவன் இயல்பாக நடந்து கொண்டான். தேவர்கள் அவர்கள் அதனால் கண் இமைக் காமல் இருந்தனர். அவர்கள் காலடிகள் தரையில் படிய வில்லை. வாடாத மலர்களை அவர்கள் மாலையாக அணிந் திருந்தனர். இவர்கள் தேவர்கள் என்பதைக் கண்டு கொண்டாள். நளன் வேறுபட்டு விளங்கினாள். மானுடனுக்கு உரிய இயல்புகளைக் கண்டாள். அவன்தான் நளன் என்பதை அறிந்து கொண்டாள்.

எடுத்தாள் மாலையை; அந்தப் பொன் மாலையை நளன் கழுத்தில் இட்டாள்; உண்மை வென்றது; நன்மை நிலைத்தது; சாயம் வெளுத்தது; தேவர்கள் வெட்கினர்; தலைகுனிந்தனர்; மனம் தவித்தனர். மானுடம் வென்றது என்று பேசினர்.

மண்ணரசர்கள் அவர்களும் மனம் வெதும்பினர்; பெருமைகள் எல்லாம் மறந்தனர். தனக்குத்தான் அவள் மாலை இடுவாள் என்று தறுக்கி இருந்தவர்கள் எல்லாம் தணிந்து போயினர். முகம் வெளுத்தது; செந்தாமரை எனப்