பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் பரிசீலிக்கப்பட்டது.
50
புகழேந்தி நளன் கதை
 


நீரில் நீர் கலந்தால் அங்கே இரண்டு என்று கூற முடியாது. நீர் மறுபடியும் ஒன்றாகத்தான் அமையும். புனலோடு புனல் கலந்தது போல் அவர்கள் கலவியில் கலந்து ஒன்று ஆயினர்.

வீரம் மிக்க நளன் போர்க்களத்தில் யானையுடன் முட்டி மோதி வெற்றி கண்டவன் அது மறக்களம்; களப் போர் அது; இங்கே அவள் முலை முகட்டில் மோதி அவள் கரங்களைக் கரத்தால் பற்றி அணைந்தனன், இளகினர். அணைந்தனர், தாபத்தால் பிணைந்து இன்பம் அடைந்தனர். இது அவன் ஏற்ற கலவிப் போர்; புது இன்பம் கண்டு வாழ்வில் மலர்ச்சியைக் கண்டான்.

அவர்கள் இன்ப வாழ்வு தொடர்ந்தது. ஆண்டுகள் சில கழிந்தன. விதர்ப்புன் நாட்டில் அவர்கள் தொடர்ந்து தங்கினர். மருமகன் அதனால் அவன் அங்கே மருவி வாழ்ந்தான். இன்ப வாழ்வில் அவன் நாட்கள் சென்றன. சொந்த நாடு திரும்ப எண்ணினான்.


2
கலிதொடர் காண்டம்

திசை முகந்த தெருவும், இசைமுகந்த வாயும், இயல் தமிழ் தெரிந்த நாவும் கண்ட அவன் அந்நாட்டுச் சோலை கள், செய்குன்றுகள், பொய்கைகள், அருவிகள், ஆறுகள் அங்கெல்லாம் அவளுடன் சென்று ஆடி மகிழ்ந்தான். இன்பத்தில் திளைத்த அவன் கடமை பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான்.

கட்டியவளை அழைத்துச் சென்று ஒட்டி உறவாடும் புதிய வாழ்க்கையை விரும்பினான். தம் இல் இருந்து தமது