பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் பரிசீலிக்கப்பட்டது.
ரா. சீனிவாசன்
51
 


வருவாயில் வாழ்ந்து தம்மவரோடு கலந்து உறவாடும் இன்பம் தனித்தன்மையது. சொந்த நாடு திரும்ப விரும்பினான். அவளைத் தன் வீட்டில் வைத்து இன்புறுத்தி மகிழவைக்க விரும்பினான். நாடு திரும்பும் நற்கருத்தை அவளிடம் நவின்றான்.

தேரைப் பூட்டினான். அருகில் அவள் அமர்ந்தாள். நகருக்கு வந்தபோது தனியனாக வந்தான். இப்பொழுது இனியனாகத் திரும்பினான். பக்கத்தில் பத்தினி ஒருத்தி அமர்ந்திருந்தாள். காணிநிலம் கேட்டுக் கேணி அருகே ஒரு குடிசையில் வாழும் கவிதை போன்ற வாழ்க்கையை அவன் கண்டான்.

“தேன் போன்ற மொழியாளே அங்கே ஒரு காட்சியைப் பார்” என்று கூறிக் காட்டினான்.

புல்லும் வரிவண்டைக் கண்டு அது பேதுறாமல் இருக்கப் பெண் ஒருத்தி அதனை விட்டு அகல்கிறாள். காற்சிலம்பு ஒலி அதற்கு அதிர்வு தரக் கூடாது என்பதற்காக அதன் ஒலியை அவிக்கிறாள். மெல்ல நடக்கிறாள். பூவைப் பறிக்காமல் தளிரை மட்டும் கொய்து திரும்புகிறாள். மயில் போன்ற அழகி அவள் என்பதைச் சுட்டிக் காட்டினான். காதல் நெஞ்சு அது மென்மையது என்பதைக் குறிப்பாக உணர்த்தினான். .

காதலன் ஒருவன் பூவினைப் பறிக்கிறான். காதலி தன் கூந்தலில் வைக்க நினைக்கிறான். அருகில் செல்கிறான். அவள் சுமை தாங்காள்; இடை மெல்லியள் என்பதால் அப்பூமலரை அவள் பாதத்தில் வைத்துச் சூட்டி மகிழ்வு காண்கிறான். பாதத் தாமரைக்கு அவன் வணக்கம் செய்வது போல் இருக்கிறது என்று சுட்டிக் காட்டினான்.

மணல் மேடுகளில் பூக்களும் முத்துகளும் சிதறிக் கிடக்கின்றன. புலவிக் காலத்தில் பிணக்குக் கொள்ளும்