பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

புகழேந்தி நளன் கதை


மாதராள் சீற்றத்தில் சிதறச் செய்யும் அணிகலன்கள் மலர் மாலைகள் போல அவை உள்ளன என்று எடுத்துக் கூறினான். படுக்கை அறையை அவளுக்கு நினைவுப் படுத்தினான். இவன் அவளோடு புலவி கண்ட நிலவுகளை நினைவுப்படுத்தினான்.

மகளிர் பூக்கொய்து அகற்றும் அக்கொம்புகள் தளர்ந்து சிதைந்து சாய்ந்து கிடந்தன. அதனைக் காட்டிக் களிப்பில் மகிழ்வு கண்ட மாதர் பின் தளர்வுற்றுச் சாய்ந்து கிடக்கும் நிலையை நினைவுப்படுத்தினான். பழைய நினைவுகளை அவள் கண்முன் கொண்டு வந்து வைத்தான். கிளர்ச்சியுறப் பேசினான்.

மங்கை ஒருத்தி அங்கைபட்டு வாய் நெகிழ்ந்த ஆம்பற் பூ, அவள் அதனை தன்முகத்தில் சேர்க்க அது சந்திரன் என்று கருதி அது மலர்கிறது. மூடிக் கிடந்த இதழ்கள் விரிந்து பூத்தன என்று கூறினான்.

கொய்த குவளை மலரினை ஒருத்தி தன் குறு நெற்றியில் வைத்து அழகு பார்க்கிறாள்; அவள் நெற்றிக் கண் படைத்த சிவன் போல் காட்சி அளிக்கின்றாள் என்று சுட்டிக் காட்டினான். அப்பெண்ணின் கண்கள் கருங்குவளை என்று பாராட்டிப் பேசினான்.

மற்றொருத்தி தன் கணவன் வாரி இறைக்கும் நீரைத் தடுக்க வண்ண மலரை ஏந்தினாள். அது தாமரைப் பூ முகத்தோடு அப்பூவினைச் சேர்த்து வைக்கிறாள். பூ மகளுக்குத் தன் காதலன் இழைக்கும் குற்றங்களைக் சொல்வது போல் அது காட்சி அளிக்கிறது என்றான்.

பொய்கையில் இருந்த தாமரை மலர்கள் இரண்டனைப் பறிக்கிறாள். அவற்றைத் தன் செவிகள் இரண்டில் தனித்தனியே செறித்து வைக்கின்றாள். இப்பொழுது அவளுக்கு மூன்று முகம் ஆகிவிட்டது என்று