பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

53


சுட்டிக் காட்டினான். இவளும் தெய்வப் பெண் ஆகி விட்டாள் என்று கூறினான்.

காதலி ஒருத்தியோடு குளத்தில் முழுகுகிறான். தாமரைத் தடாகம் அது. உள்ளே முழுகி எழுந்த தன் காதலியை அவன் கண்டு கொள்ள முடியவில்லை; அங்குள்ள பூ மலர்களில் ஒன்று என்று தவறாகக் கருதி அவளைக் காணாது துடிக்கிறான். ஏங்குகிறான். கலங்குகிறான். அவள் சிரிக்கிறாள். பின்பு இவன் கண்டு களிக்கிறான். அவள் மலர் அல்ல மங்கை என்பதை அறிகிறான். தாமரைப் பூ போல் உள்ளது மங்கையர் முகம் என்பதை இவளுக்கு அறிவித்தான். சில சமயம் இரண்டுக்கும் வேறுபாடே காண முடிவதில்லை என்று புகழ்ந்து பேசினான்.

சிறுக்கின்ற ஒளிமுகம்; செங்காந்தள் போன்ற கைகள்; முறுக்கு உடைய நெடுங் கூந்தல் இவற்றைக் காட்டி இவை கரும் பாம்பு பற்றிக் கொள்ளும் திங்கள் என்று காட்டினான். அவள் முகம் சந்திரன்; முறுக்குடைய கூந்தல் பாம்பு என்று உவமைப் படுத்திக் கூறினான்.

பெண்ணொருத்தி நீரில் முழுகி எழுகிறாள். முகத்தில் படிந்த கூந்தலை நீவி வாரித் தள்ளுகிறாள். அவள் முகம் மதிபோல் காட்சி அளிக்கிறது. மேகத்தைக் கிழித்துக் கொண்டு வெளிப்படும் மதி அவள் முகம் என்று பாராட்டிக் கூறினான். அழகை ரசிப்பதில் அவன் கொண்ட ஆர்வத்தைப் புலப்படுத்தினான்.

மகளிர் அழகைப் பாராட்டிப் பேசுவது அவளுக்கும் மகிழ்வையே தந்தது; அவள் இளம் உள்ளம் அவனை மகிழ்வித்தது.

அங்கே ஒரு பெண் செங்குவளை பறிக்கச் செல்கிறாள். இவள் நீலவிழிகள் அவற்றைப் பார்க்க அதன் கோல அழகும் மாறிவிடுகிறது; செங்குவளை கருங்குவளை