பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

57


நகரத்தை அடைந்தனர்; அரண்மனை வாழ்வு அவளுக்கு அரண் தந்தது.

தன் சொந்த நாட்டை அடைந்ததில் அவனுக்குப் பெரு மகிழ்வு; இளமை மிக்க அவன் வளமை மிக்க வாழ்வு நடத்தினான்.

மகிழ்வு என்பது மாளிகையில் இல்லை. கதவு அடைப்புச் செய்து கொண்டிருப்பதால் மட்டும் மகிழ்வு காண்பது இல்லை; சுற்றித் திரிந்து ஆடி மகிழ்வதில் அவர்கள் இன்பம் அடைந்தனர். அவன் தன் நாட்டில் இருந்த சோலைகளுக்கு அவளை அழைத்துச் சென்றான் பொய்கைகளில் அவளோடு நீராடி மகிழ்ந்தான். செய்குன்றுகளில் திரிந்து சுற்றி மகிழ்ந்தான். இன்ப வாழ்வு இடையீடு இல்லாமல் தொடர்ந்தது.

ஆண்டுகள் பன்னிரண்டு அவர்கள் இன்ப வாழ்வு தொடர்ந்தது. எந்த இடையூறும் அவர்கள் இன்பத்துக்குத் தடை செய்யவில்லை. மனைமாட்சி சிறப்புற மக்கட் பேறுதேவை; அது இல்வாழ்வின் நற்பேறு; அதனையும் அவர்கள் பெற்றனர். இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் மக்கள் இருவரைப் பெற்றனர். மூத்தவன் மகன், இளையவள் மகள்.

மக்களைப் பெற்ற மகராசியாகத் தமயந்தி விளங்கினாள். அந்தக் குடும்பம் ஒரு பூங்காவாகத் திகழ்ந்தது. பூத்துக் காய்த்த மரமாக அவர்கள் விளங்கினர். கனிகள் காய்த்துக் கவின் தந்தது.

இல்லற வாழ்வு இனிது தொடர்ந்தது. இந்த ஆண்டுகள் பன்னிரண்டும் வழுக்கி விழாமல் வாழ்வு நடத்தினான்.

ஏதாவது சறுக்கு ஏற்பட்டால் அவனை இறக்கித்தள்ளக் கலியன் காத்திருந்தான், ஏதாவது சிறு தவறு செய்தால் போதும் அவனை வளைத்துப் பிடிக்கலாம்