பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

அவன் நீதி வழுவாத தன்மையையும், நெறியையும், கொடைச் சிறப்பையும் பாடியுள்ளார்.

நளன் கதை காதற் கதை; அன்னம் தூது சென்று இருவரையும் ஒன்று சேர்த்தது. அன்னத்திடம் நளன் தன் காதலை உரைக்கிறான். அது தமயந்தியிடம் சென்று அவன் வீரத்தையும் அழகையும் நற்குணங்களையும் நவின்றது. இவை சுவைமிக்க செய்திகள் ஆகின்றன.

மன்னர்கள் கூடியிருந்த மணி மண்டபத்தில் நளனைத் தமயந்தி அறிந்து அவனுக்குப் பொன்மாலை சூட்டுகிறாள். தேவர்கள் தோல்வி அடைகின்றனர். கலி புருடன் அவர்களை வாட்டுகிறான். அதனால் அவர்கள் பிரிகின்றனர்.

பிரிந்தபின் தனிமையில் தவிக்கின்றனர். பாழ் மண்டபத்தில் நள்ளிரவில் அவளைத் தவிக்கவிட்டும் செல்கிறான்; இது பல பாடல்களில் பேசப்படுகிறது.

தமயந்தி தன் அறிவுத் திறத்தால் நளனைத் தன் தந்தை ஊருக்கு வரவழைக்கிறாள்; பிரிந்தவர் கூடுகின்றனர்; இழந்த நாட்டைப் பெறுகின்றனர்.

இந்தக் காதல் கதை புகழேந்தியாரால் கூறும்போது அது உள்ளத்தைக் கவர்கிறது. அவர்கள் சோகம் நம் நெஞ்சை உருக்குகிறது. கவிஞரின் கவிதையில் சொல்லாட்சிகள் நம்மைக் கவர்கின்றன. எதுகை மோனை நயங்கள் எழில் ஓசையைத் தருகின்றன. உருவகங்கள் கவிதைகளுக்கு அழகு ஊட்டுகின்றன. அணி நலம் மிக்க கவிதை நூல் இது.

இதனை எளிய இனிய உரை நடையில் தந்திருப்பது முதற்பகுதி, பின் அடுத்து அணி நலன்களைச் சுட்டிக் காட்டிக் கவிதைகளை விமரிசிக்கின்றது.

ஒவ்வொரு பாட்டும் அழகு உடையது; சுவை தருவது; சிறந்த சொல்லாட்சிகள் கொண்டது. அவற்றை