பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

61


ஒவ்வொருவருக்கும் ஒரு வாகனம் உண்டு. அதே போல் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஓர் ஊர்தி உண்டு என்பது அறிந்தான்.

மயில் முருகனுக்கு; கருடன் திருமாலுக்கு; எருது சிவனுக்கு; பெருச்சாளி பிள்ளையார்க்கு; இப்படித் தெய்வங்கள் தனித்தனி ஊர்திகள் பெற்றுள்ளமையை நினைத்துப் பார்த்தான்.

கலி தன்னைத் தூண்டப் புட்கரன் நிடத நாட்டுப் புறச்சோலையை அடைந்தான். அங்கிருந்து கொண்டு செய்தி சொல்லி அனுப்பினான்.

எருமைமேல் வந்திருந்தால் அவனை எமன் என்று நினைத்திருப்பான்; எருதின் மேல் வந்ததால் “சிவன்” என்று கருதினான்.

யானை மீது வந்திருந்தால் அவன் அரசனாக மதிக்கப்பட்டு இருப்பான். எருது ஏறி எவரும் வந்தது இல்லை. புதுமையாக இருந்தது.

கொடி தாங்கி இருந்தான்; அதில் என்ன எழுதி இருந்தது பார்த்து வரச் சென்றான். எழுத்து ஒன்றும் இல்லை; எழில் உடைய சித்திரமும் இல்லை; வெள்ளைத் துகில் அது. அதனால் அமைதிக் கொடி என்பதை அறிந்தான். மற்றும் கூர்ந்து பார்த்தான். உன்னிப்பாகப் பார்த்தான். அதில் சூதாடும் பலகை வரையப்பட்டு இருந்தது.

நளன் அவனைச் சென்று சந்தித்தான். தன்னிலும் அவன் மூத்தவன் என்பதால் யாத்த நட்புக் காட்டினான்.

“எங்கே இவ்வளவு தூரம்? செய்தி யாது?” என்றான்.

“பொழுது போகவில்லை. உன்னோடு அளவளாவ வந்தேன்” என்றான்.