பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

மறுப்புக் கட்டுரைகளை வெளியிட்டு மக்கள் உணர்ச்சியை எடுத்துக் காட்டிற்று.

‘மாலை மணி என்ற நாளேட்டில் தொடர்ந்து வெளிவந்த 'எரியீட்டி கட்டுரைகள், அரசியல், ஆன்மீகம், இலக்கியம், வரலாற்றுத் துறைகளிலே எதிர்ப்புக் குரல்களை எழுப்பி வந்த கடிதம், நவசக்தி, ஜெயபேரிகை, தமிழ்ச் செய்தி, நாத்திகம், போன்ற தேசிய ஏடுகளுக்குக் கடுமையான மறுப்புக் கட்டுரைகளை எழுதி, தமிழ்நாட்டு அரசியலில் ஒர் அதிரடி அதிர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்கியது.

1967-ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்தோரும்; ஆட்சியைப் பறித்தோரும் பத்திரிகைப் போர்களில் களம் கண்டு எதிர்ப்புக் கட்டுரைகளை எழுதும் நிலை வந்தது. இந்த உணர்ச்சிகள் அன்றைய தமிழ்நாட்டின் அரசியலை எதிரொலித்தன எனலாம்.

மீண்டும் 'நவசக்தி ஏடு தொடர்ந்து தனது எதிர்ப்புக்களை நாள்தோறும் எழுப்பி நர்த்தனமாடியது. 'கடிதம்' என்ற ஏட்டில் கவிஞர் கண்ணதாசன் தனது முழு எழுத்துக் கனற்சக்தியை எதிரொலித்தார். 'ஜெயபேரிகை"யில் ஜெயகாந்தன் பேரிகை ஒலிகளை எழுப்பினார்.

இவ்வாறு, இருபதாம் நூற்றாண்டு பத்திரிகை உலகத்தின் ஒர் அணி எதிர்ப்புகளை எழுப்பி இலக்கிய அறிஞர்களை, அரசியல்வாதிகளை, பேராசிரியர் பெருமக்களை, இலக்கிய படைப்பாளிகளை விமர்சிப்பதும், அவற்றை மற்றோர் அணி மறுப்புக் கட்டுரைகளை எழுதி பதிலளிப்பதுமான ஒரு கொந்தளிப்பு, 1967 முதல் 1969 வரை, கடுமையாகக் காணப்பட்டது. அந்த மூன்றாண்டு கால மறுப்புகளில் சில மட்டுமே இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.

தற்போது, அரசு நிர்வாகத்தையும், அதன் அலங்கோலங் களையும், எதிர்த்தும், மறுத்தும் துக்ளக், ஆனந்தவிகடன்,