பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iž மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

'இந்த அண்ணாதுரை, தமிழில் எதைச் சாதிக்க முடியாதவற்றைச் சாதித்தார்?”

"அப்படியென்ன தமிழில் இலக்கியங்களை எழுதிவிட்டார்?' 'பெரிய பேச்சு பேசி விட்டார்?'

'தமிழுக்கு சேவை செய்தவர்கள், வேறு பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் இல்லையா?”

- ஜெயபேரிகை 10.12.1967

என்று எழுதியவர், எழுத்தாளர் திரு. ஜெயகாந்தன் அவர்கள் ஏட்டில், துரத்துக்குடி தங்கப்பழம் என்பவர் ஆவார்.

ஒர் ஆசிரியர், பொறுப்புடைய எழுத்தாளர் திரு. ஜெயகாந்தனைப் போன்றவர்கள், இந்த மக்கட் துரோகிகளுக்கு உடந்தையாக இருக்கலாமா?

அல்லது இரண்டு கூட்டுறவு அரிப்புகளுமே இணைந்து சொரிந்து கொண்ட கட்டுரையா அது?

மனித சமுதாயத்தில், பல ஜென்மங்களைப் படைத்துவிட்ட இயற்கையை, இந்த நேரத்தில் கோபப்பட்டு, சில கேள்விகளை என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

எல்லாம் வல்ல சக்தி, இதுபோன்ற புத்தியற்றதுகளைப் படைப்பதற்குத் தனது வல்லமையைக் காட்டுமானால், 'அந்த சக்தி அறிவானந்தத்தில் இருப்பதாக, அறிவாளர், விவேகானந்தரே' கூறினாலும், அதை எதிர்த்தாக வேண்டியவனாக இருக்கிறேன்!

'அண்ணாதுரை அப்படியென்ன இலக்கியம் செய்துவிட்டார்? என்று கேட்கிற அஞ்ஞானப் பிழம்பே...!"

அவர் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் இலக்கியச் சுவை சுரக்கும் கனிகள் என்பதை, நீ எப்படி அறிவாய்?

ஞானத் திரட்சி இருந்தால் அல்லவா - அவற்றின் மோனச் சுவை உணர்ச்சிகள், உம் அறிவில் எதிரொலிக்கும்?