பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫీ மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

'கல்கி, எஸ்.டி.சுந்தரம்” போன்ற அறிவாளர்களால் வலிந்து பாராட்டப்பட்ட சமுதாய மறுமலர்ச்சி நாடகங்கள் அவை! மறந்து விட்டீரா அதை?

இவை அனைத்தையும் சங்க இலக்கியங்கள் என்று கூற நான் முன்வரவில்லையே!

இலக்கியம் படைக்கும் ஆற்றல் - கவிஞனுக்கு மட்டுமே கை வந்த கலை:

அறிஞர் அண்ணா அவர்கள், சிரம் பழுத்த ஒர் அரசியல்வாதி!

அவரிடத்தில் சங்க இலக்கியத்தை மட்டும் எதிர்பார்ப்பவன் - ஒரு மறுமலர்ச்சி சமுதாயத்தை உருவாக்க நினைப்பவனின் கடமை அல்ல!

அவர், தமிழகத்திலே இருக்கின்ற சாகா இலக்கியங்களைக் காப்பாற்றுபவர் அவற்றிற்குப் புதுக் குருதி பாய்ச்சுபவர்:

தமிழ்நாடு என்ற பெயர், இலக்கியத்தில் இல்லையே என்று பேசுகின்ற கல்லாக் களி மக்களின் கவனத்தைத் தவிடு பொடியாக்கி, தமிழ்நாடு என்று தன் தாயகத்துக்குப் பெயர் சூட்டியவர் அண்ணா!

'அண்ணாதுரை அப்படியென்ன பெரிய பேச்சு பேசி விட்டார்?' என்று கேட்கும் திரு. ஜெயகாந்தன் ஏடே!

அறிஞர் அண்ணாவின் பேச்சுதான்், அகில இந்தியக் காங்கிரசின் தமிழ்நாட்டுக் கிளையை முறித்தெறிந்த ஆற்றல்மிக்கக் கோடாரியாக அமைந்தது! மறுக்க முடியுமா உம்மால்?

அந்த மேதையின் 'நா’ வன்மைப் பேச்சுக்களை, மெய் மறந்து கேட்ட அறிவாளிகள்!; ஆளும் கட்சியைத் தோற்கடித்தார்களே, அதுதான்் நீர் குறிப்பிட்ட அண்ணாவின் பெரிய பேச்சு என்ன புரிந்ததா பேரிகையே!

நாவாட வரம்பு கட்டப்பட்ட நேரத்தையும் உடைத்தெறிந்துத் தள்ளி, “பேசட்டும் அண்ணாதுரை,