பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

காமராசர் என்ன தமிழ் இலக்கியங்களில் கலம்பகம் கண்டவரா? அந்தாதி பாடியவரா? கோவை' எழுதி 'உலா' வந்தவரா?

காமராசர் என்ன அட்டாவதான்ியா, இல்லை சட்டாவதான்ியா?

காமராசர் என்ன தசாவதான்ியா? இல்லை சதாவதான்ியா?

காமராசர் என்ன கமல பந்தம் பாடியவரா? இல்லை, லிங்கபந்தம் கண்டவரா?

காமராசர் என்ன காவியக் கர்த்தரா? இல்லை, காப்பிய மன்னர் மன்னரா?

என்ன தெரியும் காமராசருக்கு? என்று, எந்தத் தமிழ்க் கடை மகனாவது உங்களைப்போல் எடுத்தேன் - கவிழ்த்தேன் என்று கேள்விகளை ஏவிக் கேட்டானா?

அறிவு என்று ஒன்று அப்போதைய எதிர்க்கட்சியிடம் இருந்ததால், காமராசர் ஒரு தமிழன்! தமிழனுக்குச் சிலையா? என்று எவரும் எதிர் கேள்வி கேட்டாரில்லை!

'படித்தவனை வாருங்கள் என்பார்கள் - படியாதவனை வா என்பார்கள்’’ என்ற பாவேந்தர் பாரதிதாசனார் சொல்லை மீறியல்லவா - காமராசருக்குச் சிலை கண்டார்கள் - தமிழர்கள்.

எந்தக் கட்சியிலே இருந்தாலும் - அவர் ஒரு தேச பக்தர்! பொது வாழ்க்கையின் தொண்டர் என்பதற்காக ஜிம்கானா திடலிலே அவர் சிலையாக நின்றார்:

இந்த நாட்டின் விடுதலைக்காக - திருமணமே வேண்டாம் என்று, அவர் பல முறை சிறை சென்ற தியாகத் திலகம் என்பதால், இன்றும் சிலையாகக் காட்சி அளிக்கிறார் - மக்களின் மனக் காட்சியின் முன்பு!

சிலை ஒருவருக்கு உருவாக - சில தகுதிகள் இருந்தால் கூடப்

போதும், என்ற குறைந்த அளவு மன சாட்சியால் - அவர் தியாகத்தின் சின்னமாகச் சிலையாக நின்றார்!