பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி #9

உன்னைப் போல உன்மத்தமான வினாக்களை வினவ, எந்த ஒரு மனசாட்சிக்கும் - வராது மனம்! ஆனால், கேட்டு விட்டாய் கேள்விகளை! - போ! - போ!! போ!!! 'மன்னிப்போம் - மறப்போம்” என்றார் அண்ணா!

'ஆரிய மாயை' என்ற அண்ணாவின் புத்தகத்தைக் காங்கிரஸ் ஆட்சி அன்று தடை செய்ததே - ஏன்?

அந்தப் புத்தகத்துக்குள்ளே என்ன சயனைடு குப்பியா பொட்டலமாக மடித்து வைக்கப்பட்டு இருந்தது?

அறிஞர் அண்ணா பேசிய பேச்சுக்களுக்கு - 144 தடைச் சட்டம் போட்டதே அன்றைய அரசு - ஏன்? அந்தக் கூட்டத்திலே என்ன வெடிகுண்டா இருந்தது?

காந்தியடிகள் கோட்சே என்ற கொடுரனால் கொலை செய்யப்பட்டபோது, அவசரம், அவசரமாக அறிஞர் அண்ணாவை அன்று அழைத்து - வானொலியிலே பேச வைத்ததே காங்கிரஸ் ஆட்சி - ஏன்?

அப்போது மட்டும் அவரைப் பெரிய பேச்சாளர் என்று உங்களால் நினைக்க முடிந்ததா? ஒப்ப முடிந்ததா?

ஆமாம் - ஆமாம்! கட்டுரையாளரும் ஏடாளரும் அன்று காங்கிரசார் அல்லவே! அட! எடுப்பார் கை பிள்ளைகளே!

'அண்ணாத்துரை சிலையை, உலகத் தமிழ் மாநாடு நடை பெறும் இந்த நேரத்தில் வைக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேட்கிறோம்’ என்று கடாவும் 'ஜெயபேரிகை” நாளேடே!

அறிஞர் அண்ணாவுக்குக் கொடுக்கப்படாத முக்கியத்துவம் - தமிழ்நாட்டில் வேறு எவருக்கும் இல்லை!

தரித்திரம் பிடித்தவருக்கு எல்லாம் தமிழ்ப் பற்று வந்துவிட்டதே என்றால் - எவன் நம்புவான்.

'பேச்சுத் துறையிலே என்ன சாதித்தார் அண்ணாதுரை' என்று கேட்பவர்களுக்கு, இதோ சில சான்றுகள்!