பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

தமிழிலே சொல்லடுக்குகள்! தமிழ்ப் பேச்சிலே கற்பனை நயம்! தமிழ் ஒட்டத்திலே தத்துவம்! ஒர் உரை பொழிவிலே பத்துப் பதினைந்து உவமைகள்! சொல்லேருழவத்திலே சிறுகதை உருவகங்கள்! அடுக்குத் தொடர்கள்! அலங்கார வருணனைகள்! ஆற்றொழுக்கான அருவி நடைப் பேச்சுக்கள்! ஒரு சொல்லை எடுத்துக்கொண்டால் அதைக் கொண்டே முடிக்கும் வித்தைகள்! தமிழால் ஒரு அரசியலையே மாற்றி அமைக்க முடியும் என்ற அற்புதங்கள்!

ஆங்கிலத்தைப் போலவே ஈற்று மோனை கட்டிப் பேசும் தமிழ்ப் பாங்குகள்!

சில இடங்களில் முழு மோனைகள், முற்று மோனைகள் போட்டுச் சொல்லரங்கமாடும் உரைஆடல் கலைகள்!

இலக்கியப் பண்பை விட்டு - இம்மியளவும் நகராமல் இயங்கி உரையாடிடும் இயல்பு!

அறிஞர் அண்ணாவின் சொல்லாடலுக்குரிய சாதனைகள் இவை போதாவா இன்னும் வேண்டுமா?

இத்தகையவோர் ஆற்றல் மிக்கோரை, “இமடேஷன் காந்தி' என இயம்பியவருக்கு - காலம்தான்் பதில் கூற வேண்டும்!

காங்கிரஸ் பெருந்தலைவர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள் எல்லாம் அவரை ஒரு காந்தியவாதி என்று கழறிய பிறகு, கயமைகள் குரைப்பதால் நடுங்கியா ஓடிவிடும் நல்ல நிலா?

"imitation" இமிடேஷன் என்று கூறிய கட்டுரையாளரே, ஆங்கிலம் தெரியுமா உமக்கு?

அந்த ஆங்கில பதத்தின் அற்புத மாயாஜால ஆட்சியை நீர் அறிவீரா? அந்த அறிவு உமக்கேது?

நீரென்ன ஆங்கில அகராதியின் வித்தகர் ஜான்சனின் பேரனா என்ன?