பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

ஒருவரைக் கண்டவாறு ஏசி எழுத வந்த நீர்; கொடுத்த தலைப்பே, உமது அறிவீனத்தைக் காட்டிக் கொடுத்து விட்டதே என்பதைப் புரிந்து கொண்டீரா - இல்லையா?

'ரிஃப்ளக்ஷன்' - என்றால் எதிரொலித்தல்: காந்தியார் கொள்கைகளை அறிஞர் அண்ணா எதிரொலிப்பவர் என்பதல்லவா பொருள்?

'ரீ புரொடக்ஷன்” - என்றால், முன்பிருந்த ஒன்றைத் தயாரித்துத் தொடர்வது என்று பொருள்!

காந்தியடிகளுடைய அகிம்சைக் கொள்கைகளை நாட்டு மக்களுக்கு தனக்கேற்ற பக்குவத்தோடு அண்ணா வழங்குகிறார். அதனால், அவர் அரசியலில் வன்முறைகளை வெறுப்பவர் - புரிகிறதா?

'ரெப்ரசெண்டேஷன்' - காந்தியார் கொள்கைக்காகவே அண்ணா பிரதிநிதியாக நிலை பெற்று நிற்கிறார் என்று பொருள். 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு” என்பவர் அண்ணா!

எக்கோ' - சொன்னதைத் திருப்பிச் சொல்லல்! அதாவது எதிரொலித்தல் ஆகும்!

காந்தியடிகளுடைய இலட்சியங்களை அப்படியே மக்களிடையே எதிரொலிப்பதாகும்! அவரது மதுவிலக்குக் கொள்கைக்கு அண்ணா என்றும் சான்றாக நிற்கின்றாரா - இல்லையா?

கக்கூ - அது ஒர் இசைப் பறவை! சொன்ன சொற்களை இசை பட இயக்கும் பண்புள்ளது. தமிழ்ச் சான்றோர் பண்பு களை தனது மென்மையான நாத குரலோசையால் நயம்பட இசைப்பவர் - இந்திய மக்களிடையே விளக்குபவர் அண்ணா!

புேரட் - கிளி எதைக் கூறுகிறோமோ அதைத் தவறின்றி அப்படியே திருப்பிக் கூறும் - அஞ்சுகம்! அக்கூற்றில் இன்பம் தவழும்! அறிஞர் அண்ணா ஒரு தமிழ்ப் பண்பாட்டுப் பாசக் εξ!ςrfi!