பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 2:3

அதனால்தான்், இதுவரை யாருமே செய்யாத ஒர் அற்புதமான 'தம்பி என்ற குடும்பப் பாச உணர்வை ஒர் அரசியல் இயக்கத்தில் புகுத்தி, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உலக உணர்வுகளை இனிமையோடு திருப்பித் திருப்பிக் கூறினார்.

மிரர் - கண்ணாடி பார்த்த உருவத்தை அது எப்படி கண் முன் ஆடிக் காட்டுகிறதோ - அப்படியே, அண்ணாவும் ஏழை எளிய மக்களின் பிரச்னைகளை, அரசியலில் மேடையில் - எழுத்தில் எடுத்துக் காட்டிடும் பளிங்காக நின்று பளபளக்கிறார்:

ரிஃப்ளக்ட் - மீண்டும் மீண்டும் அதையே எதிரொலித்தல்.

ரிப்பீட் - சொன்னதையே திருப்பிக் கூறல்! மக்கள் மனதில் அதைப் பதியுமாறு விளக்குதல்:

சிமுலேட் - அதனைப் போன்ற ஒன்று.

பேரலல் - வெட்டாத இரு கோடுகள்! அதாவது ஜனநாயகம் - சோசலிசம் இரண்டினையும் அதனதன் பாதைகளின் படியே சென்று, மக்களை ஏற்கச் செய்ய உழைப்பவர் அறிஞர் ខ្លា

மேட்ச் - ஈடு இணையற்ற இரண்டு! அதாவது அறிஞர் அண்ணாவின் அரிய கொள்கைகளும் - காந்தி பெருமான் இலட்சியங்களும் ஒன்றுக்கொன்று ஈடு இணையற்றவை என்று பொருள்!

லிட்டரல் - அப்படியே என்று பொருள்! அதாவது காந்தியடிகளின் அரசியல் கொள்கையை அப்படியே அப்பழுக்கு ஏதுமின்றி செயல்படுத்திப் பின்பற்றுவது:

ஞானத்தின் மேற்கே! இமிடேஷன் என்ற வார்த்தைக்கு எத்தனைப் பொருட்கள் பார்த்தாயா?

இவை போன்ற பற்பல பொருட்களை இயக்குகின்ற ஒர் 'இமிடேஷன் காந்திக்குத்தான்் சிலை வைக்கின்றார்கள் . தமிழர்களுக்குக் கருவாகி உருவானவர்கள் - இல்லையா?