பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 27

அதிகமாக அரித்திருக்கின்றது என்பதை அல்லவா? காட்டுகின்றது!

'மெயில் ஏடு முரசமும், 'பேரிகை' எழுப்பிய தப்பட்டையும் இணையாகச் சேர்ந்து, அண்ணாதுரைக்கு சிலையா? என்ற சொற்போரைத் தொடுத்துள்ளன.

'மெயில் ஏடு தரம் வாய்ந்தது. தகுதி வாய்ந்த ஒரு ஆங்கிலச் செய்திப் பத்திரிகை!

உயர் தனிச் செம்மொழியாம் ஆங்கிலத்திலே எழுதியிருக்கின்றார் மெயில் ஏடு எழுத்தாளர்.

ஆங்கிலத்தை யார் படித்தாலும், அவர் உலகத்தையே அலசுகின்றார் என்று பொருள்: மொழி அப்படி:

கோள்களின் அறிவியல்!

புவியீர்ப்பு அறிவியல்!

எலக்ட்ரானிக் விந்தைகள்!

இலக்கியம் - கவிதைகள்!

அரசியல்! ஆய்வியல்:

தத்துவ விளக்கங்கள்:

தர்க்கவாத துணுக்கங்கள்!

கனவியல்: உளவியல்:

பித்தர்கள் உள்ளம்!

ஞானத்திரட்சி!

ஆன்மிகம்! தெய்வகம்!

இவற்றை எல்லாம் ஆங்கில மொழியாலே - நாம் அறிவு பெறலாம்! அவ்வளவு ஞான நூற்களையும் ஆங்கிலம் பெற்றுள்ளது:

அத்தகைய ஆங்கில அறிவை வளர்க்கும் தகுதியும் தரமுமுள்ள ‘மெயில் ஏடு, அழுக்காற்று அரசியலின் கால வசத்தால், அறிவு சூன்யமாகி விட்டதே! ப்ாவம்:

ஆனாலும், நம்மால் எப்படி ஆங்கிலத்தை வாழ்த்தாமல் இருக்க முடியும்?