பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 29

'ஆரிய மாயை'யை, ஆபாசம் என்று கூறுகின்றவர்கள், அதனை அறிவிக்கின்ற வரலாற்றினையே ஆபாசம் என்று செப்புகின்றார்கள் என்று பொருள்!

ஒரு வரலாறு, சிலருக்கு ஆபாசமாகத் தெரிந்தால், அதற்கு யார் பொறுப்பு?

அறிஞர் அண்ணாவா? இல்லை! அந்த வரலாற்றை மூல நூலாகத் துருவித் துருவி எழுதி அவனிக்கு அளித்தார்களே அந்த மேதைகளைத்தான்் ஆபாசகர்கள் எனக் கூறுகிறார்கள்!

"ரோமாபுரி ராணி' என்பது - ரோம் நாட்டின் வரலாற்று வீழ்ச்சியில் - அழகே உருவான அப்சரசிகளின் அரசியல் திரு விளையாடல்கள் என்னென்ன என்பதை - அறிவிக்கும் நூல்:

அண்ணா அவர்களின் அழகு தமிழால், அற்புத வருணனை நடையால் - இந்நூல் அருமை பெற்று தமிழ் அவனியிலே உலா வந்தது. படிக்கப் படிக்க அறிவுக்கு இன்பம் அளித்த நூல்!

வஞ்சியர்களாலும் வஞ்சகர்களாலும் இந்திய வரலாற்றில், பல ஆட்சிகள் எப்படி வீழ்ச்சியுற்றன என்பதை இன்றும் நாம் படிக்கின்றோம்!

சிவாஜியின் மராட்டிய செங்கோல், திப்புவின் மறவாண்மை ஆட்சி, தகப்பனையும் கொன்ற ஒளரங்க சீப் ஆட்சி, உடன் பிறந்தாரைப் பலி வாங்கி அரியனை அமர்ந்த அசோகன் வரலாறுகள் போன்று பல உண்டு!

அதனைப்போல, ஒவ்வொரு நாட்டு அரசும் - சாம் ராஜ்ஜியமும் - பல காரணங்களால் வீழ்ந்ததையும் நாம் வரலாற்றில் பார்க்கின்றோம்!

இட்லருடைய ஆட்சி வீழ்ச்சியடைந்தது - எதேச்சாதி காரத்தால் என்றால், ரோம் நாடு வீழ்ச்சி அடைந்தது - அப்ரசிகளால்! - அவர்தம் ஆபாச நடத்தைகளால் உலகமே இதை உணரும்!

இந்த வரலாற்று ஒவியம் - கம்பன் மூளையிலே இருந்து தெறிந்து ஓடி வந்த கற்பனையல்ல!