பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி? சூரியன் மறையாத பிரிட்டானிய சாம்ராஜ்ஜியம் - இராஜ தந்திரத்தின் தொட்டில்!

அந்த தொட்டில்கூட, தனது கயிறுகளில் ஒன்றைப் பயங்கரப் பிடியோடு தளர்த்திக் கொண்டது.

ஆனால், இன்று வல்லரசு என்ற இடத்தை விட்டு அது விலகி நிற்கின்றது!

இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்பதை, "மெயில்' ஏட்டில் எழுதிய எழுத்தருக்குத் தெரிந்திருக்க வேண்டும்!

அரசு திர்வாகம் சரியாகச் செயல்பட முடியவில்லை என்பதற்காகவே - அருணன் அஸ்தமிக்காத பிரிட்டானிய சாம்ராஜ்ஜியம் மறைய ஆரம்பித்தது.

இந்த சரித்திர ஆதாரத்தைக் கூறுவதற்குக் காரணமே, வெறும் அரைகுறை ஆங்கிலத்தால் சரடு விடுகின்றவர்களுக்குக் கொஞ்சமாவது புத்தி தெளிய வேண்டுமே என்பதற்காகத்தான்்!

'ரோமாபுரி ராணிகள்', ரோம் நாட்டில் நடந்த வெறும் சரித்திரச் சம்பவங்களைக் கொண்ட கட்டுரைகளே தவிர, அண்ணா உருவாக்கிய இலக்கியமும் அல்ல: மூல நூலும் அல்ல வழி வரலாறும் அல்ல!

இலக்கியத்திற்கும் வரலாற்றுக்கும் வித்தியாசம் தெரி யாதவர்கள்தான்், ரோம் நாட்டு சரசிகளின் வரலாறுகளின் பெரும் பகுதிகள் ஆபாசமாகத்தான்் இருக்கும் என்பார்கள்!

ரோம் நாட்டு வரலாற்றை எழுத்தெண்ணி திரு. ஜெய காந்தனின் 'ஜெயபேரிகை” ஏடு படித்திருக்குமானால், அல்லது இலக்கிய விமரிசன நிபுணத்துவம் சிறிதாவது அதற்கு இருக்குமானால், அண்ணா அவர்களைக் குறை கூறாது!

ரோம் நாட்டு வரலாற்றை வருணனை அழகோடு, அற்புத மான அலங்காரத் தமிழ் நடையில் - அப்படியே வடித் தளித்தவர் அண்ணா என்பதற்காக, அவரைக் குறைகூறுவது தெளிந்த வித்தகமாகாது!