பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 3%

ஏன்! இந்தியாவினுடைய காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிகளை விளக்க வேண்டுமா? மர்மக் கதைகளைப் போல அதன் அரசியல் அந்தரங்கங்களை அலசலாமே!

கெய்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட வரலாறும் - காந்தி யடிகள், பண்டித நேரு உட்பட பலரின் உட்கட்சிப் போராட்ட மர்ம உணர்வுக் கொலைகளையும் வீழ்ச்சிகளையும் எழுத வேண்டுமா?

இத்தகைய சம்பவங்களும் நாளை தொகுக்கப்படுமானால், அவைகூட ஆபாசமாகத்தான்் இருக்குமோ!

'ஆரிய மாயை', 'ரோமாபுரி ராணிகள்' என்ற நூற்களை எழுதியதற்காக அண்ணாதுரையை, இளங்கோவடிகளுக்கு ஈடாக, திருவள்ளுவருக்கு இணையாகத் தரம் பார்ப்பதா?' என்று விளித்திருக்கின்ற ஜெயபேரிகை ஏடே!

அறிஞர் அண்ணா இளங்கோவடிகளுக்கு ஈடு என்று, இயம்பியது எவர்?

திருவள்ளுவர்க்கு ஈடாகும் உரு, எந்த நூற்றாண்டிலும் இதற்கு முன்பு கருவாக அமையவில்லை - இன்றுவரை! நாளை மீதும் நமக்கு நம்பிக்கை இல்லை!

உலகமே உவந்தளித்த ஒரே ஒரு கரு, அந்த உரு திருவள்ளுவர்தான்்!

அத்தகைய மறு கரு உருவை, இனி அவனி பெறல் அரிது!

இன்னொரு இளங்கோவடிகள் எந்த நூற்றாண்டிலாவது தோன்றலாம்.

ஆனால், திருவள்ளுவரைப் போன்றதொரு கரு, இனி உருவாகும் என்று எதிர்பார்ப்பதற்கே, உரிய - சமுதாய சூழ்நிலைகள் இல்லையே!

பொய்யில் புலவரின் ஞானச் சுடரிலே வழிந்தோடும் சிறு 'கோண்', அறிஞர் அண்ணா அவர்கள்!