பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 37

'என்ன இருந்தாலும், 'இராவணன் இரக்கம் என்ற பொருளிலா ஒர் அரக்கன்தான்்' என்று அவரும், அப்போது தெய்வ பாசத்தோடு முழக்கமிட்டார்.

அந்த வாத வரிகளின் விலா எலும்புகள் ஒவ்வொன்றையும் ஒடித்து முறித்தவர் அறிஞர் அண்ணா! சர் ஆர்.கே.எஸ்.சின், புராண அறிவுக்காகப் போராடும் முதல் பலமாக அன்று அண்ணா திகழ்ந்தார்.

இரக்கம் என்ற பொருள், யாருக்கு? எப்போது? ஏன்? எங்கே? எப்படியெப்படி? இருக்க வேண்டும் என்பதை, 'நீதி தேவன் மயக்கம்’ என்ற நாடகம் மூலம் நாட்டிற்கு இரண்டு மணி நேரம் விளக்கினார் - அண்ணா!

அறிஞர் அண்ணா அவர்களே, அதில் இராவணனாக நடித்ததைக் கண்ட கலைஞர் ஒளவை டி.கே.சண்முகம் மெய்சிலிர்த்துப் போனார்!

'நடிகர்களாகிய எங்களையும் மிஞ்சிவிட்டார் அண்ணா” என்று அவர் பலப்படப் பாராட்டி மகிழ்ந்தார்:

கம்பர் எழுதிய பன்னிராயிரம் கவிதைகளையும் சுருக்கி, ஒரே ஒரு சொல்லில் கம்ப இராமாயணத்தை அடக்கியவர் அண்ணா!

ஆம்: ‘'இரக்கம்' என்ற வார்த்தையிலே, இராம காதை நுழைந்தது - நாடகமானது நாட்டிலே பவனி வந்தது!

கம்பரே கூட கனவு கண்டிருக்க மாட்டார் - நாம் பன்னிரா யிரம் பாடல்கள் வாயிலாக எழுதிய இராம காதைக் கருவை, ஒர் உருவாக்கி, அதை 'நீதி தேவன் மயக்கம்” என்ற நாடகமாக எழுதும் அறிஞன் ஒருவன் எதிர் காலத்திலே பிறப்பான் என்று!

இராம காவியம் தீட்டிடக் கம்பர் стевтът பாடுபட்டிருப்பாரோ...? அதுவும் நமக்குத் தெரியும்!

ஆனால், அந்த பன்னிராயிரம் பாடல்களைக் கொண்ட கவிதைப் பூக்களை, இரக்கம் என்ற ஒரு பொருளிலா அரக்கன் என்ற கம்பரது நாராலேயே தொடுத்து, நீதி தேவன் கழுத்திலே