பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி? மாலையாகச் சூட்டி, மக்கள் மன்றத்திடம் நீதி கேட்டவர் அண்ணா!

சிரம் பழுத்த அறிஞர்கள் எல்லாம், அந்த மாலையைத் தங்களது சென்னிகளைத் தாழ்த்திக் காட்டிச் சூட்டிக் கொண்டு மகிழ்ந்தார்கள்.

'மெயில் ஏடே! மெயிலுக்குப் பாரம் தாங்கும் 'ஜெயபேரிகை தோள்களே!

கம்பரையும் மிஞ்சும் ஒர் அறிஞனின் கம்பரசம் ஏடு, உங்களை ஒடஒட இப்போது விரட்டி வாதமிடுவதைப் புரிந்து கொண்டீர்களா - இல்லையா?

அறிவு, கவிதையிலேதான்் அரும்ப வேண்டுமா? ஏன், உரை நடையிலே உலா வந்தால் - உங்களுடைய உந்திகள் ததிங்கணத்தோம் போட்டு ஊஞ்சலாடுமோ!

இதுதான்் ஓர் இலக்கிய விமரிசன எழுத்தாளனின் தனித் தன்மை மிக்க ஆற்றல்! சக்தி வல்லமை! அறிவு தீட்சண்யம்! மனசாட்சிக் கோல்!

சமத்துவ சமன் தூக்கும் தங்க எடை போடும் தராசுக் கோலிலே - விறகுக் குச்சிகளை எடை போட முன்வரலாமா 'மெயில் ஏடே?

'கம்பரசம்” பற்றிக் கேள்வி கேட்பவர்களுக்கு அதன் முழுக் கதையை ஓரளவு சுருக்கி உரைத்தேன். விரித்தால் பெருகும்! விலா எலும்புகளை நொறுக்கும்.

ஒர் இலக்கியமோ, வரலாறோ, வேறு அறிவு எதுவோ, ஆதரவும் - எதிர்ப்பும், அவைகட்கு எப்போதும் எங்கும் எழுவதென்பது இயற்கையே!

அந்த இரு நோக்கு விமரிசனங்கள், பிற்காலத்தில் வரும் ஆராய்ச்சியாளர்களுக்குரிய அறிவுத் தாயின் தாய்மைச் சின்னப் பாலாகவும் அமையலாம் - இல்லையா"பேரிகைக் காந்தரே?

தமிழ் இலக்கியத்தையும் - வரலாற்றையும் ஆய்வு செய்த அறிஞர் பெருந்தகை டி.எஸ்.வையாபுரி பிள்ளை அவர்கள்,