பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 33

தமிழறிஞர்களின் ஆய்வுக்கு முரண்பாடாகவே ஆராய்ச்சிகள் புரிந்து பல நூற்களைத் தீட்டவில்லையா?

அதனால், அறிஞர் வையாபுரி அவர்களை தமிழ்த் துரோகி என்று எழுதி, பேசி - தமிழ்க் குறும்பர்கள் சிலர் குசும்புகளை எழுப்பவில்லையா?

தமிழை, ஆராயத் தகுதி படைத்தவர்கள் எல்லாம், பிள்ளையினுடைய நூற்களை ஒதுக்கித் தள்ளிவிட முடியுமா? தள்ளி விட்டார்களா?

எந்த நூலகச் சாலைகள், இந்த மேதையினுடைய நூற்களை எல்லாம் - "ஏலேன் ஏலேன்' என்று, எகிறி எட்டி உதைத்து விட்டன?

ஒர் இலக்கியத்தை அல்லது வரலாற்றை, ஆதரித்தே விமரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான்் விமரிசனமா? அதுதான்் - அதன் இலக்கணமா?

உலகத்தில் எவ்வித செயலுக்குமே எதிர்ப்பும் உண்டு - ஆதரிப்பும் உண்டு!

அண்ணா அவர்கள்கூட எங்கும் கம்பரை எதிர்த்து விமரிசனம் செய்யவில்லையே! எண்ணற்ற இடங்களில் கம்பர் திறமையைப் புகழ்ந்து பெருமைப்படுகிறார் - போற்றுகின்றார் - வியந்து பாராட்டுகின்றார்:

கம்பர், தான்் எடுத்துக் கொண்ட காவியப் பாத்திரங்கட்கு, எப்படியெல்லாம் காமச் சுவையால் மெருகேற்றியுள்ளார் என்பதைத்தான்், அவர் கம்பரசம் நூலில் சுட்டியுள்ளாரே - தவிர, கம்பரது தமிழ் மாண்புக்கு அணுவென்ன, கோண் அளவு, 'துமி கனம் கூட மாசு கற்பித்து அவமதித்தவர் அல்லர் அண்ணா!

தேவ மாக் கதையில் இத்தகைய சிற்றின்பக் குறைகள் இருப்பது நியாயமா? தேவையா? என்பதே கம்பரசம்! அண்ணாவின் எண்ணம்!

இதுவா ஆபாசம்? இதுவா கேடு? விமரிசனம் புரியும் அறிவுடையார் எவரும் இதனை ஏற்பரோ - இகழாரோ -